சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி 'பேனர்' வைத்தால் வழக்கு! மாநகராட்சி இறுக்கிப்போடுது கிடுக்கிப்பிடி

Added : செப் 14, 2019
Advertisement

கோவை:சென்னையில் பேனர் விழுந்து, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், கோவையில் விதிமீறும் பேனர்கள் மீதான வழக்கு நடவடிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அரசியல்வாதிகளின் இல்ல விழாக்கள், தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காக, வைக்கப்படும் விளம்பர பலகைகளும், பேனர்களும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன.
இந்நிலையில், அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை, பேனர் தயாரிக்கும் அச்சகத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும் என, சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்தது.இந்த அதிரடி உத்தரவு, மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வரும் நிலையில், கோவையில் விதிமீறல் பேனர்கள் மீதான நடவடிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், வழக்கு பதிவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாநகரில், விதிமீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமீறுவோர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை, பேனர் விஷயத்தில் விதிமீறியதாக, 20 எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றனர்.இன்று பேனர்கள் அகற்றம்கோவையில் அவிநாசி ரோடு, சத்தி ரோட்டில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடியில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை அகற்ற கட்டட உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மாலை கெடு விதித்தனர். இன்று முதல் மாநகரின் பல்வேறு இடங்களில், பேனர்களை அகற்றும் பணி துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X