பொது செய்தி

தமிழ்நாடு

புதுசு புதுசா டிசைன் வந்தாச்சு...

Added : செப் 14, 2019
Advertisement

''விவசாயத்தை போல், தலைமுறை தலைமுறையாய் செய்து வரும் நகைப்பட்டறை தொழிலில், நான்தான் கடைசி தலைமுறை என்று நினைக்கும்போது மனது வலிக்கிறது,'' என்ற ஒரு புது சமாச்சாரத்துடன் நம்முடன் பேசினார், பெ.நா.பாளையத்தைச் சேர்ந்த ஆதிமூர்த்தி.பாரம்பரிய நகை பட்டறை தொழிலாளியான இவர் நம்முடன் பேசியபோது, ''ஒரு வாரத்துக்கு முன்பு பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்ட தங்கம் இன்று, 28,480 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தங்கத்தின் விலையேற்றத்தினால் நகைபட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது தவறு. உண்மையில் கடந்த, 10 ஆண்டுகளாகவே எங்கள் வாழ்க்கை, மெல்ல மெல்ல மங்கலாகி வருகிறது,'' என்றார்.''ஏன்...தங்க நகை விலை உயர்வுதானே காரணமாக இருக்க முடியும்?'' என்றதற்கு, அவசரமாக மறுத்த அவர், தொடர்ந்து கூறிய தகவல்கள் சற்று யோசிக்க வைத்தது.''பெரிய பெரிய நகைக்கடைகளை நடத்துவோர், சொந்தமாக பேக்டரி வைத்துள்ளனர். அதற்கு வட மாநிலங்களில் இருந்து, தொழிலாளர்களை கொண்டு வந்து நகை உற்பத்தி செய்கின்றனர். இதனால், தொழிலின் தரம் குறைவதோடு, அந்தந்த மாநிலத்தின் டிசைன் நகைகளே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு தயாரிக்கப்படும் பாரம்பரிய நகைகளின் மீது, மக்களுக்கு மோகம் குறைந்து விடுகிறது. இதனால் இந்த தொழிலையே நம்பி, பாரம்பரியமாக இருந்த பல தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று முடங்கியே விட்டது,'' என்றார்.சரி...இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?''இதற்கு அரசாங்கம் நினைத்தால் தீர்வு காண முடியும். அரசாங்கமே நகை தொழிலுக்காக ஒரு கமிட்டி உருவாக்கி, அதன் மூலம் பாரம்பரிய நகை தொழிலாளர்களுக்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டும். ''நகை தொழிலாளர் சங்கங்களை முதன்மைபடுத்தி, அதன்மூலம் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். ''இதுபோன்ற விஷயங்களை நடைமுறைப்படுத்தினாலே மக்களும், எங்களை போன்ற தொழிலாளர்களும் பயனடைவார்கள்,'' என்று கூறி முடித்தார் அவர்.நம் பாரம்பரிய நகை டிசைன்களை பாதுகாக்க, இது கொஞ்சம் சீரியசாக யோசிக்க வேண்டிய விஷயம்தானே!பெரிய பெரிய நகைக்கடைகளை நடத்துவோர், சொந்தமாக பேக்டரி வைத்துள்ளனர். அதற்கு வட மாநிலங்களில் இருந்து, தொழிலாளர்களை கொண்டு வந்து நகை உற்பத்தி செய்கின்றனர். இதனால், தொழிலின் தரம் குறைவதோடு, அந்தந்த மாநிலத்தின் டிசைன் நகைகளே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பாரம்பரிய நகைகளின் மீது, மக்களுக்கு மோகம் குறைந்து விடுகிறது.-ஆதிமூர்த்தி தங்க நகை தொழிலாளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X