சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகாதார சீர்கேடு: குப்பை லாரி சிறைபிடிப்பு: தீட்டுக்கல் பகுதி மக்கள் போராட்டம்

Added : செப் 14, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி தீட்டுக்கல்லில் நகராட்சி குப்பை லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. வார்டுகள் மற்றும் நகர் பகுதியில் தினசரி, 8 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பை, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீட்டுக்கல் குப்பை குழியில் கொட்டப்படுகிறது.
அதிகளவில் கொட்டப்பட்ட குப்பைகளாலும், சமீபத்தில் பெய்த மழையால், ஈரப்பதம் ஏற்பட்டு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள தோட்டத்திற்கு செல்லும் நடைப்பாதையிலும் குப்பை கொட்டப்பட்டதால், தொழிலாளர்கள் நடந்து செல்ல முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி மக்கள், தோட்ட தொழிலாளர்கள், நகராட்சி குப்பை லாரியை சிறைபிடித்தனர்.
பின்பு, 'குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது; கிணற்றுநீர் மாசடைகிறது; நடைப்பாதை ஆக்கிரமித்து குப்பை கொட்டியதால், நடமாடுவதில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்,' என, கோஷம் எழுப்பி, போராட்டம் நடத்தினர்.நகராட்சி பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் முரளிசங்கர் ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். பின், போராட்டம் கைவிடப்பட்டது. பின், நடைப்பாதையை ஆக்கிரமித்து கொட்டப்பட்ட குப்பை பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X