பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் கர்நாடக 'சரக்கு'

Added : செப் 14, 2019
Share
Advertisement

குன்னுார்:'நீலகிரி படுக மக்கள் வசிக்கும் கிராமங்களில் மதுவகைகளை பயன்படுத்துவதில்லை,' என, பிரசாரம் மேற்கொண்டு போர்டுகள் வைத்து, இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், குன்னுார் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் ஓதனட்டி செல்லும் சாலையில், கர்நாடக மாநில சரக்கு பாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.இப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'இந்த பகுதிகளில் சிலர் கர்நாடக மாநில சரக்குகள் உட்பட மிலிட்டரி சரக்குகளையும் கொண்டு வந்து விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X