வாத்ரா வெளிநாடு செல்ல அனுமதி

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாத்ரா வெளிநாடு செல்ல அனுமதி


புதுடில்லி: ராபர்ட் வாத்ரா வெளிநாடு செல்ல, டில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், சொத்து வாங்கி பண மோசடி செய்தது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகனும், அக்கட்சி யின் பொதுச் செயலர், பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ரா மீது, வழக்கு பதிந்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், பிரியன்ஸ்டன், சதுக்கத்தில், 16 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி யதில், மோசடி நடந்துள்ள தாக, வாத்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


latest tamil news




இவ்வழக்கில், வாத்ராவுக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என, நிபந்தனை விதித்து உள்ளது.இந்நிலையில், செப்., 21 முதல், அக்., 8 வரை, தொழில் நிமித்தமாக, ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி, கடந்த, 9ல், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், வாத்ரா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு, அமலாக்கத் துறை தரப்பில், கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.'வாத்ராவுக்கு அனுமதி வழங்கினால், இவ்வழக்கில், சாட்சியங்களை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் முயற்சிக்கக் கூடும்; இதனால், விசாரணையில் இடையூறு ஏற்படும்' என, அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், வாத்ரா ஸ்பெயின் நாட்டுக்கு மட்டும் செல்ல அனுமதி அளித்து, நீதிபதி, அரவிந்த் குமார் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
14-செப்-201918:13:31 IST Report Abuse
cbonf இந்தியாவில் நீதிபதிகள் மீது அடிக்கடி எழும் குற்றச்சாட்டுகள் உண்மைதானோ என்று எண்ணும் அளவுக்கு இருக்கின்றன நீதிபதிகளின் தீர்ப்புகள். வாட்ராவை ஸ்பெயின் நாட்டுக்கு போக அனுமதித்ததின் காரணம் என்ன? அவர் ஸ்பெயின் நாட்டை தவிர வேறு எங்கும் செல்லமாட்டார் என்பதை எப்படி உறுதி செய்யமுடியுமா? அவரிடம் வேறு கள்ள பாஸ்ப்போர்ட்டுகள் இருந்தால் என்ன செய்யமுடியும்/
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-செப்-201917:48:37 IST Report Abuse
Endrum Indian நம்ம அநீதிமன்றம் அநீதிபதிகள் இதற்கு பெட்டியுடன் வா உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள் என்று சொல்வது போல இருக்கின்றது இது .
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201910:12:58 IST Report Abuse
Janarthanan ஸ்பெயின்க்கு பிசினஸ் ட்ரிப் போகிறாராம் துரை , அப்படி என்ன பிசினஸ் பண்ணுகிறார் தெரிய வில்லை ??? திருட்டு பயல்களுக்கு ஆதாரத்தை அழிக்க எல்லா சான்ஸ் கொடுத்து விடுவார்கள் , பின்பு ஆதாரங்களுக்காக நாங்க காத்து கொண்டு இருந்தோம் என்று அறிக்கை விடுவார்கள் நம்ம ஊரு நீதிவான்கள்?? என்னங்க எஜமான் இப்படி பண்ணறீங்களே??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X