சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி ஏரியில் பயணிகள் கூட்டம்: படகு இயக்கும் ஊழியர்கள் திடீர் போராட்டம்

Added : செப் 14, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி படகு இல்லத்தில் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில், ஊழியர்களின் திடீர் போராட்டத்தால், ஒரு மணி நேரம் தாமதமாக படகுகள் இயக்கப்பட்டன.ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு மற்றும் மோட்டார் படகு, என, மொத்தம், 130 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இங்கு இயக்கப்படும் மிதி படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், மோட்டார் மற்றும் துடுப்பு படகுகள் குறைந்தளவே இயக்கப்படுகிறது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிதி படகில் சவாரி செய்ய விருப்பினாலும், மோட்டார் படகில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி, சவாரி செய்ய நிர்பந்திப்பதாக, கூறப்படுகிறது.இந்த 'பனிப்போர்' அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில், நேற்று காலை, படகுகளை இயக்கும் பல ஊழியர்கள், நிர்வாக பிரச்னைகள் தொடர்பாக, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், படகு இல்லம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டது. இதை தொடர்ந்து, ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X