பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர்களுக்கு தொடர் ஊக்குவிப்பு அவசியம்'

Added : செப் 14, 2019
Advertisement

பந்தலுார்:'பழங்குடியின மாணவர்கள் மத்தியில், தொடர் ஊக்குவிப்பு இருந்தால் கல்வியில் நிச்சயம் சாதிக்க முடியும்,' என, தெரிவிக்கப்பட்டது.கூடலுார் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழங்குடியின கிராம மக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் மெத்தனம் காட்டுவதால், இடைநின்றல் அதிகரித்து வருகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் அறிவுரைபடி, கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பழங்குடியின கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.இதன் ஒரு பகுதியாக, முதுமலை புலிகள் காப்பகம் பென்னை, சேப்போடு உள்ளிட்ட கிராமங்களில் ஆர்.டி.ஓ. நேரடி ஆய்வு செய்தார். அப்போது பேசிய சிறுவர்கள், 'தங்கள் பெற்றோர் அடிக்கடி சண்டையிடுவதால் தங்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. 'வனப்பகுதி வழியாக வனவிலங்குகள் தொல்லை இருப்பதாலும், காலை நேரங்களில் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது,' என்றனர்.
இதனையடுத்து, அவர்களின் பெற்றோரிடம் பேசிய ஆர்.டி.ஓ., ராஜ்குமார், ''குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அனுப்பினால் மட்டுமே, பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும், விரைவில் பள்ளியில் மாணவர்கள் தங்குவதற்கான வகையில், புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு, கட்டில் மற்றும் மெத்தை, கம்பளி போன்றவை வாங்கப்படும். அதன் பின்னர் மாணவர்கள் தினசரி பள்ளியில் தங்கி படிக்கலாம்,'' என்றார்.பின்பு, இடைநின்ற மாணவர்கள் முக்கட்டி ஜி.டி.ஆர். பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆய்வின் போது, பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், ஆசிரியர் மாரியப்பன், அறக்கட்டளை கள இயக்குனர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X