பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Added : செப் 14, 2019
Advertisement

ஊட்டி:தெங்குமரஹாடாவில் உள்ள அல்லிமாயார் பழங்குடி கிராமத்தில், 355 பயனாளிகளுக்கு, 5 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள, தெங்குமரஹாடா அல்லிமாயார் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மனு நீதிநாள் முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள், சிறியூரிலிருந்து தெங்குமரஹாடா வரை, 8 கி.மீ., துாரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர்.பின், அல்லிமாயார் பழங்குடியினர் கிராமத்தில் நடந்த முகாமுக்கு கலெக்டர் தலைமை வகித்து, 355 பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவரிடம், 'தெங்குமரஹாடா ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும்,' என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.மக்கள் குறைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு, உரிய அரசு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 'இங்குள்ள பழங்குடி மக்களின் பிரச்னைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X