பொது செய்தி

தமிழ்நாடு

கூடுக்கு கூடுது மவுசு! இரு மாதமாக உயர்ந்து காணப்படும் பட்டுக்கூடு

Added : செப் 14, 2019
Advertisement
 கூடுக்கு கூடுது மவுசு! இரு மாதமாக உயர்ந்து காணப்படும் பட்டுக்கூடு

உடுமலை:உடுமலை பகுதிகளில் உற்பத்தியாகும் வெண் பட்டுக்கூடுக்கு, கூடுதல் விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், மூன்று ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது; 1,600க்கும் மேற்பட்ட பட்டுக்கூடு வளர்ப்பு மனைகள் உள்ளன.மாதத்திற்கு சராசரியாக, ஒரு லட்சம் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்ய, ஒரு லட்சம் முட்டைகள் வைக்கப்பட்டு, 90 லட்சம் கிலோ கூடுகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய அளவில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை முன்னணியில் உள்ளது. இங்கு, உற்பத்தி செய்யும் கூடுகள் தருமபுரி, கோவை மற்றும் ராம்நகர் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பருவ மழைகள் குறைவால், மல்பெரி சாகுபடி பாதித்து, புழு வளர்ப்பு பாதித்துள்ளது. இந்நிலையில், பட்டுக்கூடுகளுக்கு தற்போது திருப்தியான விலை கிடைத்து வருகிறது.கடந்த சில மாதமாக, பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், கடந்த இரண்டு மாதமாக விலை உயர்ந்து, சராசரியாக, கிலோ, 350 முதல், 420 ரூபாய் வரை கிடைத்து வருகிறது. இதே நிலை பல மாதங்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவை பட்டுக்கூடு கொள்முதல் மையம்
உடுமலையில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், நிரந்தர பட்டுக்கூடு கொள்முதல் மையம் மற்றும் பட்டு நுால் உற்பத்தி மையம் ஆகியவை அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: உற்பத்தி செய்யப்படும் வெண் பட்டுக்கூடுகளை, தர்மபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. உடுமலையில் கொள்முதல் மையம் அமைத்தால், விவசாயிகளுக்கு, போக்குவரத்து செலவு, அலைச்சல் குறைவதோடு, கூடுதல் விலையும் கிடைக்கும்.ஒரு சில மாதங்கள் செயல்பட்ட மொபைல் மார்க்கெட், செயல்பாடும் முடங்கியுள்ளது. எனவே, பட்டுக்கூடு உற்பத்திக்கான உதவிகள் மற்றும் கொள்முதல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
குளிர் காலம் ஜாக்கிரதை மத்திய பட்டு வளர்ச்சி வாரிய விஞ்ஞானி சமுத்திரவேல் கூறுகையில்,''விரைவில் குளிர் காலம் துவங்க உள்ளதால், மல்பெரி செடிகளில், குருத்துப்புழு தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். புழுக்களின் முட்டைகளை அழிக்கக்கூடிய, டிரைகோ கிராமா குளோனியஸ் ஒட்டுண்ணி, புழுக்களை அழிக்கும், பிரக்கான்பிரிவிகாரினி, கூட்டுப்புழுக்களை அழிக்கும், டெட்ரா டைகஸ் ஆகிய ஒட்டுண்ணிகள் மூலம் அழிக்கலாம். தேவையான அளவு ஒட்டுண்ணிகள் இருப்பு உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X