பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் பஸ் ஸ்டாண்டை மறந்த போலீசார்

Added : செப் 14, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் சென்று திரும்ப, போலீசார் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.கோவை - நாகபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்.83), மடத்துக்குளம் பஸ்ஸ்டாண்ட் அமைந்து உள்ளது.பஸ் ஸ்டாண்ட், கடந்த 1998ம் ஆண்டு கட்டப்பட்டது.
தொடர்ந்து 2015ல்,ஒரு கோடி ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்டது. ஆனால், பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வந்து திரும்பாமல், வீணாகி வந்தது. தேசியநெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றனர்.இதனால், வாகன நெரிசல், விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. பஸ்கள் உள்ளே சென்று வர, பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்திய நிலையில், கடந்த வாரம், பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்களை அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்துக்கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.கடந்த, 7ம் தேதி, போராட்டத்திற்கு மக்கள் தயாரான நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசி, பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றுதிரும்பும் பணி யில் ஈடுபட்டனர். ஆனால், அடுத்த நாளே போலீசார் கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போல், பஸ்கள் ரோட்டில் நின்று சென்றன.இதனையடுத்து, தன்னார்வலர்கள் அறிவிப்பு பலகை வைத்தும், ஒலி பெருக்கி அமைத்து பஸ் டிரைவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல் வழங்கி பஸ்களை பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று திரும்பும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்று, மடத்துக்குளம் போலீசார் இதில் ஈடுபட்டுள்ள நபர்களிடம் வந்து, நீங்கள் எதற்காக இந்த பணியில் ஈடுபடுகின்றீர்கள். இது நீங்கள் செய்யக்கூடாது என தடுத்ததோடு மிரட்டியும் உள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'போலீசார் செய்யாததால், தன்னார்வலர்கள் நல்ல பணியில் ஈடுபடும்போது, அதை போலீசார் தடுக்கின்றனர். நிரந்தரமாக பஸ் ஸ்டாண்டில், போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவும், கண்காணிக்கவும் டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X