பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை: துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:உடுமலை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை குறித்து துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.திடக்கழிவு மேலாண்மை குறித்து, உடுமலை, தாராபுரம் நகராட்சியிலுள்ள துப்புரவு பணியாளர்களுக்கான, உடுமலை நகராட்சி கூட்ட அரங்கில், ஒரு வாரம் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
இதில், குப்பையின் வகைகள், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், அளவு மதிப்பீடு, மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல், மறு சுழற்சிக்கு பயன்படாத கழிவுகள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், தெரு சுத்தம் செய்தல், நுண் உரக்குடில், மண் புழு உரக்குடில், காற்றோட்ட முறையில் திடக்கழிவுகளை உரமாக மாற்றுதல், வீட்டிலேயே உரக்குடில் அமைத்தல், தோட்டக்கழிவுகள் மேலாண்மை மற்றும் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.துப்புரவு பணியின் போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள், அவற்றை பயன்படுத்தல் மற்றும் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
பயிற்சி முகாமை, நகராட்சி பொறியாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர்கள், செல்வம், பி.செல்வம், செல்வகுமார், தாராபுரம் நகராட்சி ஆய்வாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துப்புரவு பணியாளர்களின் பணியின் அவசியம் குறித்து, தங்கவேல் பேசினார்.இதில், உடுமலை, தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும், 60 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து ஒரு வாரம், குழு வாரியாக பயிற்சி முகாம் நடக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X