பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை ஒன்றியத்தில் ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் பணி

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவதற்கு, வார்டுகள் மறுவரையறை செய்யும் பணிகள், 2017ம் ஆண்டு முதல் நடக்கிறது. தொடர்ந்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், 1,500க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட வார்டுகள், மறுவரையறை செய்யப்பட்டு, கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது.தற்போது, பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் செய்யப்பட்ட, வாக்காளர்கள் பட்டியல், அனைத்து ஒன்றியங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை ஒன்றியத்தில், வார்டு மறுவரையறை செய்யப்பட்ட பட்டியல் படி, 245 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது, ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஆய்வில், 11 ஓட்டுச்சாவடிகளில், 1,500க்கும் அதிகமாக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவற்றை பொதுவான பிரிவிலிருந்து, ஆண் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளாக பிரித்து, கூடுதலாக 11 ஓட்டுச்சாவடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X