பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்ரோ பொறியாளருடன் மாணவியர் கலந்துரையாடல்

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இஸ்ரோ உதவி பொறியாளருடன் மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ உதவி பொறியாளர் சுப்ரமணி கலந்து கொண்டார். அப்போது, மாணவியருக்கு, செயற்கைக்கோள் தயாரிக்கும் இடங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் இடங்கள், செயற்கைகோள்களின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். சந்திரயான்-2 முயற்சி குறித்தும் மாணவியரிடம் பேசினார். மாணவியரும் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் திலகாம்பாள் தலைமை வகித்தார்.ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார். மாணவியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X