பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி காணப்படும் குடிநீர் தொட்டிகள் : வனத்தில் திரும்புகிறது பசுமை

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், வன விலங்குகள் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் நிரம்பி காணப்படுகின்றன.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகள், 50 ஆயிரம் எக்டர் பரப்பளவில் அமைந்துள்ளன.வன விலங்குகள் குடிநீர் வசதிக்காக, தடுப்பணைகள், போர்வெல்கள் அமைத்து, சோலார் மின் உற்பத்தி மற்றும் மோட்டார் மூலம் நீர் இறைத்து, தொட்டியில் சேகரித்தல் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இரு வனச்சரகங்களிலும், காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே, 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. மேலும், அமராவதி வனச்சரகத்தில், 20 தொட்டிகள், உடுமலை வனச்சரகத்தில், 20 தொட்டிகள் என, 40 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், இரு வனச்சரகங்களிலும், தலா ஐந்து தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, மேற்கு தொடர்ச்சிமலைகளில் பெய்த கன மழை காரணமாக, இத்தொட்டிகள் நிரம்பி காணப்படுகின்றன.
வனத்துறையினர் கூறுகையில், 'வறட்சி காலங்களில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக தரைமட்ட தொட்டி கட்டப்பட்டுள்ளன. 'ஆண்டு முழுவதும், மான், பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள், இத்தொட்டிகளில் தண்ணீர் குடித்து வருகிறது. யானைகளின் முக்கிய வழித்தடத்தில் இத்தொட்டி அமைந்துள்ளதால், சீசன் காலங்களில் யானைகள் முகாமிடுகின்றன. 'தற்போது பெய்த மழை காரணமாக, அனைத்து தொட்டிகளும் நிரம்பி காணப்படுகின்றன. வழக்கம்போல் சோலார் மூலமும் தண்ணீர் எடுக்கப்பட்டு நிரப்பப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X