பொது செய்தி

தமிழ்நாடு

வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு: உடுமலை, மடத்துக்குளத்தில் 580 'பூத்'

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தொகுதியில் ஓட்டுச்சாவடி மாற்றப்படுகிறது.2020 ஜன.,1ம் தேதியை தகுதிநாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள உள்ளதால், 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும் உள்ள ஓட்டுச்சாவடிகளை, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.அதன் அடிப்படையில், வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், உடுமலை தொகுதியில், 293 ஓட்டுச்சாவடிகளும், மடத்துக்குளம் தொகுதியில், 287 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன.இதில், மடத்துக்குளம் தொகுதியில், சாமராயபட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தெற்கு பார்த்த, வடக்கு கட்டடம், அறை எண், 2 கட்டடம் பழுதடைந்துள்ளதால், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, மேற்கு பார்த்த , கிழக்கு கட்டடம், தெற்கு பகுதி, அறை எண், 1க்கு மாற்றப்படுகிறது.கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
ஓட்டுச்சாவடி கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு, உடுமலை கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்களிடமும், வரும் 19ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.பெறப்படும் கோரிக்கை அடிப்படையில், வரும், 20 மற்றும் 21ம் தேதி, சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் பதிவு அதிகாரிகளால், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலரால் இறுதி முடிவு எடுக்கப்படும், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X