பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலைத்துறை அறிவுரை

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை;சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நஞ்சில்லாத உணவு உற்பத்திக்கு, பூச்சிக்கொல்லிகள் இல்லாத பயிர் சாகுபடி முறை அவசியமானது. இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும், என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கை :தோட்டக்கலைப்பயிர் சாகுபடியில், பிரதான பயிர் பாதுகாப்பாக பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆகும்.
இவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், சுமார் ஒரு சதவீதம் மட்டுமே அழிக்கப்படுகிறது.மீதமுள்ள, 99 சதவீதம் மருந்துகள், பூமியையும், வளிமண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், நீர், மண் மற்றும் காற்று நச்சுத்தன்மை அடைந்து, மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.இதனால், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிகிறது; தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்கிறது.எனவே, பூச்சிக்கொல்லிகள் இல்லாத பயிர் சாகுபடி தற்போது மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய வேண்டும்.எனவே, பழைய முறைகளான, இயந்திர கருவிகளை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்துதல், நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு, தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் உயிரியல் முறையில் அழிக்கலாம்.விளக்குகளின் வெளிச்சத்தில் பூச்சிகளை கவர்ந்து அழிக்கும், விளக்குப்பொறி, வண்ண ஓட்டுப்பொறிகள், பழைய குடம், பிளாஸ்டிக் டப்பாக்கள், தார்ப்பாய் விரிப்புகளை பயன்படுத்தும் போது, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, அசுவினி, இலைப்பேன் உள்ளிட்ட சாறு உறிஞ்சும் பூச்சிகள் கவரப்பட்டு, அதிகளவு கட்டுப்படுத்தலாம்.
பூச்சிகள் இனப்பெருக்கத்திற்காகவும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், ஒரு விதமான வாசனை திரவத்தை காற்றில் பறக்கவிடுகிறது. அத்திரவத்தினை செயற்கை முறையில் தயாரித்து, பூச்சிகள் அழிக்கப்படுகிறது. இம்முறையில், தட்டு வகை, புனல் வகை, கூம்பு வகை இனக்கவர்ச்சி பொறிகள் உள்ளன.அதே போல், வயல்களில் பறவை தாங்கிகள் அமைத்தால், பறவைகள் அதில் வந்து அமர்ந்து, புழுக்களை உணவாக கொள்ளும். மேலும், ஒட்டுண்ணிகள், உயிர் பூச்சி கொல்லிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். மேலும், விவரங்களுக்கு, தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு, உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X