பொது செய்தி

தமிழ்நாடு

பயிறுவகை பயிர்களில் அதிக மகசூல் வழிமுறை: வேளாண்துறை அறிவுறுத்தல்

Added : செப் 14, 2019
Advertisement

மடத்துக்குளம்:பயிறுவகை பயிர்களில் உற்பத்தியை பெருக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.வேளாண்துறையினர் வெளியிட்ட அறிக்கை:உளுந்துபயிர், பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை, கொள்ளு சாகுபடியில் தனிப்பயிராக இருந்தால், எக்டருக்கு,20 கிலோ, கலப்புபயிருக்கு, 10 கிலோ விதைக்க வேண்டும்.விதைக்கும் முன், விதை நேர்த்தி செய்வது அவசியம்.
ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தகுந்த அளவு விதையுடன் கலந்து விதைக்கலாம். மண் ஆய்வுப்படி, இறவை நிலமாக இருந்தால், 25:50:25 விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துடன், 20 கிலோ கந்தகச்சத்தும் இட வேண்டும்.மானாவாரியாக இருந்தால், 12.5:25:12.5 என்ற விகிதத்தில் தழை,மணி, சாம்பல் சத்துடன், 10 கிலோ கந்தகச்சத்து இட வேண்டும். பயிறு நுண்ணுாட்டத்தை, ஐந்து கிலோ மணல் சேர்த்து துாவ வேண்டும், விதைத்த பின், மூன்றாம் நாளும், அடுத்த பத்துநாள் இடைவெளியிலும், பூக்கும், காய்க்கும் பருவத்திலும் கட்டாயம் நீர் பாய்ச்ச வேண்டும்.நீர் பற்றாக்குறையானால், இரண்டு சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசல் தெளிக்கலாம். களையை கட்டுப்படுத்த, 3.3 லிட்டர் பெண்டிமெத்தலினை, 500 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த மூன்றாம் நாள் தெளிக்க வேண்டும்.
அசுவினி, வெள்ளை ஈ தாக்குதலை தவிர்க்க, மீதைல் டெமாட்டனும், பேன் தாக்குதலுக்கு கந்தகமும் தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோய் தாக்கிய செடிகளை வெட்டி அப்புறப்படுத்தவும், இலைப்புள்ளி நோய்க்கு மான்கோசாப்பும், வேர் அழுகல் நோய்க்கு வேப்பம் புண்ணாக்கும் பயன்படுத்தலாம்.இந்த முறைகளை பின்பற்றினால், பயிறுவகை சாகுபடியில், நல்ல மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X