பொது செய்தி

தமிழ்நாடு

போஷன் அபியான் திட்ட கிராம சபை கூட்டம்: உடுமலை, குடிமங்கலத்தில் 11,742 பேர் பங்கேற்பு

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில், 'போஷன் அபியான்' திட்டத்திற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சமூக நலத்துறையின் சார்பில் 'போஷன் அபியான்', எனப்படும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது.
இதன்படி அனைத்து வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில், செப்., மாதம் முழுவதும் 'போஷன் அபியான்', திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில், நேற்று, அனைத்து ஊராட்சிகளிலும் 'போஷன் அபியான்' திட்டம் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.பள்ளி கட்டடங்கள், மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளதை, திட்ட அலுவலர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பணிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை களப்பணியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களை, இப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்பது உள்ளிட்ட பொருள்களை மையமாக கொண்டு, உடுமலையில் 38 மற்றும் குடிமங்கலத்தில் 23 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது.பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலையில், ஆண்கள், 3,165 மற்றும் பெண்கள், 4,053 என மொத்தமாக, 7,218 பேர் பங்கேற்றனர். குடிமங்கலத்தில், ஆண்கள், 1,288பேர், பெண்கள், 2,636 மற்றும் சிறுவர்கள் 600 பேர் என மொத்தமாக, 4,524 பேர் பங்கேற்றனர். உடுமலை கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சியில், கிராம சபைக்கூட்டத்தை தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெண்களுக்கான உடல்நல பாதுகாப்பு, வளர் இளம் பருவத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து திட்ட அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X