பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : செப் 14, 2019
Advertisement

உடுமலை:குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் பயிர்காப்பீடு செய்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கை :காரீப் பருவ பயிர்களுக்கு தற்போது பயிர்க்காப்பீடு செய்யப்படுகிறது.
வாகத்தொழுவு, அணிக்கடவு, சோமவாரப்பட்டி, இலுப்பநகரம், கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, கொங்கல்நகரம், சுற்றுப்பகுதி கிராம விவசாயிகள், வாழை பயிர்க்காப்பீட்டுக்கு, 2 லட்சத்து 18 ஆயிரத்து 348 ரூபாய்க்கு,10,917 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.கொண்டம்பட்டி, ஆமந்தகடவு, குடிமங்கலம், பூளவாடி, பொன்னேரி, கோட்டமங்கலம், புக்குளம், இலுப்பநகரம், சோமவாரப்பட்டி, அணிக்கடவு, மூங்கில்தொழுவு, கொங்கல்நகரம், பண்ணைக்கிணறு, தொட்டம்பட்டி, புதுப்பாளையம், விருகல்பட்டி சுற்றுப்பகுதியில் வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.இந்த விவசாயிகள், 94 ஆயிரத்து 848 ரூபாய்க்கு காப்பீடு செய்ய, 4,742 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.
அணிக்கடவு பகுதிகளில் தக்காளி பயிரிட்டுள்ளவர்கள், 66 ஆயிரத்து 690 ரூபாய் காப்பீடுக்கு, 3,335 ரூபாய் பிரீமிம் செலுத்த வேண்டும்.விவசாயிகள், பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி பாஸ் புக் நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், விதைப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பொது சேவை மையத்தின் மூலம் பிரீமியம் தொகை செலுத்தி, பயன்பெறலாம்.காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், 94861 48557 என்ற எண்ணில் அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X