சிவ்பால் சிங் பதவிக்கு சமாஜ்வாதியால் ஆபத்து

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019
Advertisement
சிவ்பால் சிங் பதவிக்கு ஆபத்து

லக்னோ: முலாயம் சிங் யாதவின் சகோதரர், சிவ்பால் சிங்கின், எம்.எல்.ஏ., பதவியை பறிக்கக் கோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில், சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எதிர்க்கட்சியான, சமாஜ்வாதி சார்பில், சட்டசபை சபாநாயரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், சிவ்பால் சிங், எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அதற்கு பின், பிரகதீஷில் சமாஜ்வாதி என்ற தனிக்கட்சியை, அவர் துவக்கினார்.





சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அவரது கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எங்கள் கட்சி சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர், தனிக் கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிட்டதால், அவர் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ., பதவியிலிருந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் இந்த நடவடிக்கையால், சிவ்பால் சிங்கின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிவ்பால் சிங், சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, புதிய கட்சியை துவக்கினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X