எஸ்டேட்டில் வசதியில்லை: போராட்டத்துக்கு ஆயத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்டேட்டில் வசதியில்லை: போராட்டத்துக்கு ஆயத்தம்

Added : செப் 14, 2019

வால்பாறை:'டான்டீ' தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி, வரும், 15ம் தேதி மறியல் போராட்டம் நடத்த தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டம், சட்டசபை தொகுதி செயலாளர் வீரமணி தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு சங்க பொதுசெயலாளர் கேசவமருகன், இணை செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா 'டான்டீ' ரோட்டை நகராட்சி சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும்.'டான்டீ' தேயிலை தோட்டத்தில் உள்ள ஏழு சரகங்களில் உள்ள தொழிலாளர் குடியிருப்புக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வனவிலங்கு தாக்கி உயிரிழந்தால் எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வால்பாறை நகரில் வரும், 15ம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சங்க பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X