பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பண்ணைக்குட்டை திட்டம்: வேளாண் பொறியியல் துறை அழைப்பு

Added : செப் 14, 2019
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இலவசமாக பண்ணைக்குட்டை அமைத்துக்கொள்ள, வேளாண் பொறியியல் துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஒரு லட்சத்து, 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல், தென்னை சாகுபடி பரப்பு உள்ளது.இவற்றின் இடையே, கோகோ, ஜாதிக்காய், பாக்கு உள்பட பலவகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. எட்டாயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி பயிர்கள் சாகுபடி நிலம் உள்ளன.
கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட நீராதாரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். ஆனால், சொற்ப அளவிலான விவசாயிகளே மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும் பண்ணைக்குட்டை அமைத்து உள்ளனர்.இந்நிலையில், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் பருவமழையை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, வேளாண் பொறியியல் துறை மூலம், விவசாய நிலங்களில் இலவசமாக பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்க முடிவெடுத்து உள்ளது.இத்திட்டத்தில், பயன்பெற விண்ணப்பிக்குமாறு, வேளாண் பொறியியல் துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறை உதவிப்பொறியாளர் ரேணுகாதேவி கூறியதாவது:நபார்டு மூலம் ஒரு விவசாயிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பண்ணைக்குட்டை இலவசமாக அமைத்து தரப்படுகிறது.
எவ்வகை நிலத்திலும் விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெறலாம்.பண்ணைக்குட்டை அமைப்பதால், மழைநீர் அதில் தேங்கி நின்று நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு உயரும். மேலும், தண்ணீர் தேக்கும் தொட்டி போல் பயன்படுத்தலாம்.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதி விவசாயிகள், சிட்டா, அடங்கல், நில வரைபடத்துடன், மீன்கரை ரோட்டிலுள்ள பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்யலாம்.நிலம் ஆய்வு செய்து பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்கப்படும். திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X