பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ஊடுபயிராக கொள்ளு மண்ணுக்கு உயிரூட்டுவதில் கவனம்

Added : செப் 14, 2019
Advertisement

பொள்ளாச்சி:நெகமம் அருகே, கப்பளாங்கரையில், 37 ஏக்கர் பரப்பளவில் தென்னைகளுக்கு இடையே, மண்ணை வளமாக்கும் வகையில் ஊடுபயிராக, கொள்ளு சாகுபடி நடக்கிறது.பண்டைய காலங்களில், மண்ணுக்கு உயிரூட்ட, தொழு உரமிட்டு, சாகுபடி நிலத்தில் சீராக பரப்பப்பட்டது. அதன்பின், ரசாயன உரம் துாவப்பட்டு, பயிர் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.
நாளடைவில் ரசாயன உரங்களால் மண்ணில் சத்து குறைவு ஏற்படுவது அறிந்த விவசாயிகள், மீண்டும் பழையபடி, சணப்பை, கொள்ளு மற்றும் நவதானியங்களை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.சணப்பை மற்றும் கொள்ளு விதைப்பு, களைகளை வளரவிடாமல் தடுக்கின்றன. இன்றைய விவசாயிகள் பெரும்பாலும் கொள்ளு விதைப்புக்கு முதலிடம் கொடுத்து வருகின்றனர்.கப்பளாங்கரையை சேர்ந்த விவசாயி தங்கவேல், 40 ஏக்கரில், 37 ஏக்கரில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கொள்ளு விதைப்பு மேற்கொண்டார்.தொடர்ந்து பெய்யும் தென்மேற்கு பருவமழையால், கொள்ளு வளர்ந்து, படர்ந்துள்ளது.அடுத்த சில நாட்களில் செடிகள் பூ விட துவங்கியதும் ரெட்டோவெட்டர் கொண்டு, மண்ணில் மடக்கி உழுது, மண்ணுக்கு ஊரமேற்றப்படுகிறது.விவசாயி தங்கவேல் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும், தென்னை வளர்ச்சி, தேங்காய் உற்பத்தியை கருத்தில் கொண்டு, 40 ஏக்கர் பரப்பில், கொள்ளு அல்லது சணப்பை விதைக்கப்படுகிறது.செடிகள் வளர்ந்து பூ விடும் தருணத்தில், மடக்கி உழுது, மண்ணுக்கு உரமாக்கப்படுகிறது. இது மண்ணில் சரிந்துள்ள சத்துகளை மீண்டும் அளித்து, பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால், தென்னையில் மகசூல் அதிகரிக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X