பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி நேரத்தில் சிறப்பு பஸ்கள் தேவை: அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

Added : செப் 14, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் - உடுமலைக்கு, பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கான சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் பகுதியில் இருந்து, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடுமலை, பழநி பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச்சென்று திரும்புகின்றனர்.
ஆனால், போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.சில கிராமப்பகுதியில் பள்ளி நேரங்களில் பஸ் போக்குவரத்து இல்லை. வழக்கமான வழித்தட பஸ்களிலேயே மாணவர்கள் பயணிக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லுாரிக்கு பயணிக்கும் நேரமான காலை, 7:30 மணியிலிருந்து, 8:30 மணி வரை சில டவுன்பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. இது வழக்கமான பயணிகளுக்கே போதியதாக இல்லாமல், நெருக்கடி, படியில் தொங்குதல் போன்ற சிரமங்கள் ஏற்படுகிறது.இந்த நிலையில், இவர்களுடன் மாணவர்களும் சேர்ந்து பயணிக்கும் போது, அதிக நெருக்கடி, மூச்சுத்திணறல், மாணவியருக்கு மனஉளைச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. இதனால், அவர்கள் பள்ளி செல்லும் முன்பே சோர்ந்தும், தளர்ந்தும் விடுகின்றனர்.
மோட்டார் வாகன விதிப்படி, 58 முதல் 60 பேர் தான் பயணிக்க அனுமதி உள்ளது. ஆனால், மடத்துக்குளம் பகுதியில், 80 முதல் 100 நபர்கள் ஒரு பஸ்சில் சராசரியாக பயணிக்கின்றனர். பல ஆண்டுகளாக, மாணவர்கள் நெரிசல் மற்றும் படியில் தொங்கிச்செல்லும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், நெரிசல், விபத்து அபாயமும் குறையும்.எனவே, மடத்துக்குளம் கிராமப்பகுதிகளை இணைக்கும் வழித்தடம் உருவாக்கி, மடத்துக்குளம் - உடுமலைக்கு மாணவர்களுக்கான சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X