பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்: 101 பேருக்கு நலத்திட்ட உதவி

Added : செப் 14, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் மொத்தம், 101 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி வடக்கிப்பாளையத்தில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், தாசில்தார் தணிகைவேல் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமை வகித்து பேசுகையில், ''குடிமராமத்துப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குளம், குட்டைகள் துார்வாருவதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் படிக்க வைக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 'அட்மா' திட்டத்தில் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் மண்புழு உர தயாரிப்பு சிறுதளை வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பில், பயனாளி ஒருவருக்கு கள்பந்தல் அமைக்க பணி ஆணையும், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், வெண்டை விதையும் வழங்கப்பட்டது.விதவை மற்றும் முதியோர் ஓய்வூதியத்தொகை - 26, சமூக நலத்துறை திட்டம் - 6, சலவைப்பெட்டி - 2, தையல் இயந்திரம் - 2, இலவச வீட்டுமனைப்பட்டா - 8, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கல்வி உதவித்தொகை - 52 என மொத்தம், 101 பேருக்கு, 17 லட்சத்து, 51 ஆயிரத்து, 367 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா என கோரிக்கைகளை வலியுறுத்தி, 119 மனுக்கள் பெறப்பட்டன. தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், கண்காட்சி நடத்தப்பட்டது.முகாமில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X