பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 14, 2019
Advertisement

நெகமம்;பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் ஓடைகளில் பரவியுள்ள முட்புதர்களை அகற்றி, துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிக்க, தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ், குளம், குட்டைகளை துார்வார, ஊராட்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியுள்ளன. நீண்ட காலத்துக்கு பின், குளம், குட்டைகள் துார்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால், சிற்றாறுகள், ஓடைகளில், ஆள் நுழைய முடியாத அளவுக்கு, புதர் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.வடசித்துார், கோதவாடி, வகுத்தம்பாளையம் பகுதிகளில் ஓடைகளில் புதர் வளர்ந்துள்ளதால், நரிகள், மான்கள் கூட்டமாக காணப்படுகின்றன.வளர்ப்பு ஆடுகள், கோழிகளை நரிகள் கடித்து இழுத்துச்சென்று உட்கொள்கின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய ஓடைகள், குளம், குட்டைகளின் கரையில் வளர்ந்துள்ள களைச்செடி, கொடிகள் மற்றும் பரவியுள்ள புதர்களை அகற்ற, அந்தந்த பகுதி ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X