முதல்வர்களுக்கான வருமான வரியை மாநில அரசே செலுத்தியது அம்பலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முதல்வர்களுக்கான வருமான வரியை மாநில அரசே செலுத்தியது அம்பலம்

Added : செப் 14, 2019
Share

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில், 1981லிருந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகித்த அனைவருக்கும், மக்கள் வரிப் பணத்திலிருந்தே, வருமான வரி செலுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி.,யில், 1981ல், வி.பி.சிங்., முதல்வராக இருந்தார். அப்போது, அவர், காங்கிரசில் இருந்தார்.முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகிப்போர் பலர், ஏழைகளாக இருந்ததால் அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், அப்போது, உ.பி.,யில், ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான வரியை, மாநில அரசே, மக்களின் வரிப் பணத்திலிருந்து செலுத்தும்.இந்த சலுகையை, பா.ஜ.,வின் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதியின், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், காங்கிரசின், என்.டி. திவாரி உள்ளிட்ட பல முதல்வர்களும், அமைச்சர்களாக இருந்தவர்களும் அனுபவித்து வந்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து, காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:உ.பி.,யில், காங்கிரஸ் ஆட்சி காலங்களில், முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகித்த பலரும், ஏழ்மையான குடும்பங்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கான சம்பளமும் மிக குறைவாக இருந்தது.ஆனால், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான சம்பளம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X