வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (38+ 36)
Advertisement
UP Ministers,  Paying Tax, Four Decade,Old Practice, Ends, உ.பி., முதல்வர், அமைச்சர்கள், வருமான வரி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில், 1981லிருந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகித்த அனைவருக்கும், மக்கள் வரிப் பணத்திலிருந்தே, வருமான வரி செலுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்கள் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும் என முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில், 1981ல், வி.பி.சிங்., முதல்வராக இருந்தார். அப்போது, அவர், காங்கிரசில் இருந்தார்.முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகிப்போர் பலர், ஏழைகளாக இருந்ததால் அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், அப்போது, உ.பி.,யில், ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான வரியை, மாநில அரசே, மக்களின் வரிப் பணத்திலிருந்து செலுத்தும். இந்த சலுகையை, பா.ஜ.,வின் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதியின், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், காங்கிரசின், என்.டி. திவாரி உள்ளிட்ட பல முதல்வர்களும், அமைச்சர்களாக இருந்தவர்களும் அனுபவித்து வந்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது. இப்படி ஒரு சட்டம் இருப்பது தங்களுக்கு தெரியாது என பல அரசியல் கட்சிகளும், அம்மாநில முக்கிய தலைவர்களும் மறுத்தனர்.






இந்நிலையில், உ.பி., மாநில நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், உ.பி., முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், இனிமேல், அவர்களின் வருமான வரியை, அவர்களே செலுத்துவார்கள். தற்போது வரை வருமான வரியை அரசின் கருவூலத்தில் இருந்து தான் செலுத்தப்பட்டது. இதனை ரத்து செய்வது என்ற முடிவு முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவின் பேரில் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-செப்-201910:26:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni பதவிக்குவரச்சிதான் ஏழை களா இருந்தாக ஆனால் மந்திரி ஆனதும் அவாளும் செவ்வனே செல்வந்தர்களாவே ஆயிட்டாங்களே வரிகட்டித்தான் ஆவோனும் சோனியா ராகுல் பிரியங்க வடுமாங்கா எல்லாம் கூட வரியேகட்டாத ஏழைகளா தான் இருக்காங்களா தமிழ்நாட்டுலேயும் இருக்க இந்தமாதிரி சட்டம்
Rate this:
Share this comment
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
15-செப்-201906:34:31 IST Report Abuse
Naagarazan Ramaswamy இத்தனை காலமும் காங்கிரஸ் ஆட்சி நடந்ததே ஒருவரும் இந்த செய்தியை சொல்லவில்லையே. என்னே தேச பக்தி
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-செப்-201905:33:04 IST Report Abuse
J.V. Iyer அட.. வெட்கக்கேடாக உள்ளது. எல்லாவற்றையும் வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலியுங்கள். முதல்வர் யோகி. ஆதித்யநாத் அவர்களே உங்களுக்கு நன்றி.. நன்றி.. எப்படியெல்லாம் நாட்டை கொள்ளை அடித்திருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X