எய்ம்ஸில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட அமித்ஷா

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
எய்ம்ஸ், மருத்துவமனை, பிரதமர் மோடி, பிறந்த நாள்,  உள்துறை அமைச்சர், அமித்ஷா, நட்டா, தூய்மைப்பணி,

புதுடில்லி: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாள் வரும் செப்., 17 அன்று வருகிறது. அதனை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், நாடு முழுவதும் செப்., 14 முதல் 20 வரை, ஒரு வாரம் சேவா சப்தா( சேவை வார பிரசாரம்) ஆக கொண்டாட திட்டமிட்டது.


latest tamil newsஇதனை தொடர்ந்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித்ஷா, பா.ஜ., செயல் தலைவர் நட்டா இணைந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். பா.ஜ., மூத்த நிர்வாகிகள் விஜய் கோயல், விஜேந்தர் குப்தா ஆகியோரும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பழங்கள் வழங்கி, அவர்களின் உடல்நலனை கேட்டறிந்தனர்.


latest tamil news
இதன் பின்னர் அமித்ஷா கூறுகையில், நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள், சேவை வார பிரசாரம் மேற்கொள்வார்கள். நாட்டிற்காகவும், ஏழை மக்களுக்காகவும் பணியாற்ற பிரதமர் மோடி, தன்னை அர்ப்பணித்துள்ளார். இதனால், சேவை வாரமாக கொண்டாடுவது சரியாக இருக்கும் என்றார்.


latest tamil newsஉ.பி., மாநிலம், ஹாமிர்பூரில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பா.ஜ., மாநில தலைவர் சுவந்திர தேவ் சிங் மற்றும் மாநில அமைச்சர்கள் அசோக் கத்தாரியா, ரன்வீந்திர பிரதாப் சிங் ஆகியோர் இணைந்து தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
14-செப்-201911:04:10 IST Report Abuse
A.Gomathinayagam இன்றைய அவசரமான தேவை இந்திய பொருளாதாரம் சுத்தபடுத்த பட்டு மக்களின் வாங்கும் சக்தி உயர்வே
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
14-செப்-201910:44:48 IST Report Abuse
Ramesh Just a formality seva..To make it a success continue till the nation turns clean
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
14-செப்-201910:36:41 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை யாருமே இல்லாத இடத்துல எதுக்கு டீயை போடற. இவங்க முன்னாடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, அமிதாப் பச்சன், பிரேம் நசீர், பத்மஸ்ரீ கமல்ஹாசன் எல்லாம் நிக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X