சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளிடம் படகு விபத்து: மேலும் ஒருவர் சடலம் மீட்பு

Added : செப் 14, 2019
Advertisement

தஞ்சாவூர்: அரியலூர் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மேலராமநல்லூரில் 11ம் தேதி செல்வவிநாயகர் வீரஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மாலை படகு மூலம் ஊர் திரும்பும்போது ஆற்றில் நடுவே படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 38 பேர் மீட்கப்பட்டனர். மூவர் மாயமாகினர். அதில் கரூப்பூரைச் சேர்ந்த ராணி என்பவரின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றின் மகாராஜபுரம் அருகே பட்டுக்குடியைச் சேர்ந்த சுயம்பிரகாசம் 55 என்பவரது உடல் கரை ஒதுக்கியது. அருகில் இருந்தவர்கள் உடலை மீட்டனர். மாயமான மற்றொருவரான நாயக்கர்பேட்டையைச் சேர்ந்த பழனிச்சாமியை தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X