பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடிக்கு திருநங்கையர் திருமணம்

Added : செப் 14, 2019
Advertisement

தஞ்சாவூர்: பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்தி, காதல் ஜோடிக்கு, திருநங்கையர் திருமணம் செய்து வைத்தனர்.
தஞ்சாவூர் அருகே, உதாரமங்கலத்தைச் சேர்ந்த ஜெயா, 21, என்ற பெண்ணுக்கும், சித்திரவேல், 25, என்பவருக்கும், வரும், 16ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஜெயா, அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ், 25, என்பவரை காதலித்து வந்தார்.'திருமணத்தில் விருப்பம் இல்லை' என, காதலன் விக்னேஷிடம் ஜெயா தெரிவித்துள்ளார். விக்னேஷ், தன் உறவினரான, தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சத்யா, 35, என்ற திருநங்கையிடம், காதல் விவகாரத்தை கூறியுள்ளார். இதையடுத்து, சில திருநங்கையர் மற்றும் விக்னேஷுடன் சென்று, சரபோஜிராஜபுரம் மகளிர் போலீசில் சத்யா புகார் அளித்தார். எஸ்.ஐ., ராணி, ஜெயா மற்றும் அவரது பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தினார்.இதில், உடன்பாடு ஏற்பட்டு, பெண் வீட்டார், விக்கேனஷுக்கு பெண் கொடுக்க சம்மதித்தனர். அங்குள்ள முனியாண்டவர் கோவிலில், விக்னேஷ் ஜெயா திருமணம் நேற்று நடந்தது.ஜெயாவுக்கு நிச்சயம் செய்த வாலிபரிடம், வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X