பொது செய்தி

தமிழ்நாடு

அடிக்கல்லுடன், 'அடங்கிய' பாலம்: கொள்ளிடம் படகு விபத்துக்கு காரணம்

Added : செப் 14, 2019
Advertisement

தஞ்சாவூர்: 'மேலராமநல்லூர் குடிக்காடு இடையே கொள்ளிடம் ஆற்றில், திட்டமிட்டபடி உயர்மட்ட பாலம் கட்டியிருந்தால், படகு விபத்து நடந்திருக்காது' என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அரியலூர் தஞ்சை மாவட்ட எல்லையில், மேலராமல்லூர் கிராமம், கொள்ளிடம் ஆற்றின் நடுவே, 1,001 ஏக்கரில், தீவு போல அமைந்துள்ளது; 1,500 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வூரில் கரும்பு, நெல், வாழை, மிளகாய், கத்திரி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் விளையும் பொருட்களை, கும்பகோணம், தஞ்சாவூர் சந்தைக்கு விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். கோரிக்கை இக்கிராமத்தில் உள்ளவர்கள் உயர்கல்வி கற்கவும், மருத்துவ வசதிக்கும், தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம், பாபநாசம் ஆகிய பகுதிகளைச் சார்ந்து உள்ளனர். கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் இல்லாத நாட்களில், மாட்டு வண்டிகள், டூ வீலர்கள், கார்கள் போன்றவற்றில், ஆற்றின் குறுக்கே, தற்காலிக பாதை அமைத்து, பயன்படுத்துகின்றனர். தங்களை தஞ்சாவூர் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என, இக்கிராம மக்கள், பல போராட்டங்கள் நடத்தி, ஓய்ந்து விட்டனர். கொள்ளிடம் ஆற்றின், இருபுறமும் பாலம் அமைத்து தர வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆற்றின் வடக்குப் பகுதியில், 750 மீட்டர் நீளத்தில், 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டது முதல், அங்கு வசிக்கும் மக்களுக்கு, பஸ் வசதியை, அரியலூர் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.அதேபோல், 'ஆற்றின் தென் பகுதியான, தஞ்சை மாவட்டம், குடிக்காடு மேலராமநல்லூர் இடையே பாலம் அமைத்தால், கும்பகோணம் அரியலூர் இடையே போக்குவரத்து எளிதாகும். பயணத்தில், 20 கி.மீ., குறைய வாய்ப்புள்ளது' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 60 கோடி ரூபாயில், உயர்மட்ட பாலம் கட்ட, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் ஏதும் துவங்கவில்லை. 'இந்த பாலம் கட்டப்பட்டருந்தால், 11ம் தேதி படகு விபத்து ஏற்பட்டிருக்காது. எனவே, விரைந்து பாலத்தை கட்ட வேண்டும்' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை உள்ளது. அதை சரி செய்து, விரைவில் கட்டுமானம் துவங்கும்' என்றனர்.

உடல்கள் மீட்பு: இதற்கிடையில், 11ம் தேதி, படகு கவிழ்ந்த விபத்தில், இரு ஆண்கள், ஒரு பெண் மாயமாகினர். நேற்று முன்தினம் ஒரு பெண் உடல், நேற்று ஒரு ஆண் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவர் உடலை தேடும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X