பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Added : செப் 14, 2019
Advertisement

ஆத்தூர்: மாரியம்மன், விநாயகர் கோவில், கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அருகே, சொக்கநாதபுரம், மோட்டூரில், மாரியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. அதன் கும்பாபி?ஷக விழாவை முன்னிட்டு, கடந்த, 11ல், கணபதி ?ஹாமம், முதல் யாகசாலை பூஜை, நேற்று முன்தினம், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, மூன்றாம் கால யாகசாலை பூஜைக்கு பின், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, கோபுர கலசம் மீது, புனித நீரூற்றி, சிவாச்சாரியார்கள், கும்பாபி?ஷகத்தை நடத்திவைத்தனர். அதேபோல், விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
பெரியாண்டிச்சியம்மனுக்கு...: வாழப்பாடி, தம்மம்பட்டி சாலையையொட்டியுள்ள, பழமையான பெரியாண்டிச்சியம்மன் கோவிலை சீரமைத்து, வண்ணம் தீட்டி பிரதிஷ்டை செய்தனர். நேற்று காலை, கோவில் வளாகத்திலுள்ள பெரியாண்டிச்சியம்மன், விநாயகர், வீரகாரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, புனித நீரூற்றப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X