பொது செய்தி

தமிழ்நாடு

சில்லி சிக்கன், பிரியாணி விற்பனை: மாதிரி ஆய்வு முடிவில் 'திடுக்'

Added : செப் 14, 2019
Advertisement

சேலம்: தரமற்ற சில்லி சிக்கன், பிரியாணி விற்பது, அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டு, மேல் நடவடிக்கை தொடர்கிறது.
சேலம் மாவட்ட, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் குழுவினர், கடந்த ஜூலையில், தரமற்ற, பாதுகாப்பற்ற, கலப்பட உணவுப்பொருட்களை மாதிரி எடுத்து, சென்னை, பகுப்பாய்வுக்கு அனுப்பினர். சமீபத்தில், பெறப்பட்ட அதன் முடிவு, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கதிரவன் கூறியதாவது: மொத்தம், 64 உணவு மாதிரிகளை அனுப்பினோம். அதில், 14 முடிவு வரவில்லை. மீதமுள்ளவை அனைத்தும், தரமற்ற, பாதுகாப்பற்ற, ஒவ்வாத உணவுப்பொருளாக கண்டறியப்பட்டுள்ளது. மாநகரில், சில்லி சிக்கன், சில்லி மீன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் லாலி பாப், சிக்கன் ரைஸ், குஸ்கா, பிரைடு மீன், தந்தூரி சிக்கன், வெஜ் சில்லி பரோட்டா உள்ளிட்ட அனைத்தும், ஒவ்வாத உணவாக உள்ளது. அதேநிலை, மாவட்ட கடைகளிலும் உள்ளது. இத்தகைய உணவை உட்கொண்டால், வயிறு உபாதை உள்ளிட்ட பல்வேறு பிரச்னை வரும். இதுதொடர்பாக, டி.ஆர்.ஓ., நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X