பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., காரை மறித்த மக்கள்: பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட எதிர்ப்பு

Added : செப் 14, 2019
Advertisement

கொளத்தூர்: மேட்டூர் எம்.எல்.ஏ., காரை மறித்த மக்கள், அவரிடம், பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை, நேற்று காலை, மக்களிடம் குறைகேட்க, கொளத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சின்ன மேட்டூர் அருகே, மக்கள், காரை மறித்தனர். தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய செம்மலையிடம், மக்கள் கூறியதாவது: சின்னமேட்டூரில், பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணியை தொடங்க, இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்கு, ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம், பால் கொள்முதல் மைய கட்டடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலகத்தை, வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைக்கு, தொகுதி நிதியிலிருந்து, கட்டடம் கட்டித்தருவதாக, செம்மலை உறுதியளித்தார். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், அதே பகுதியில், சின்னமேட்டூர் பஸ் ஸ்டாப் அருகே, எம்.எல்.ஏ., காரை நிறுத்தி, நிலப்பிரச்னை தொடர்பாக, மக்கள் மனு கொடுத்தனர். அங்குள்ள தையல் கடையில் அமர்ந்து, அவர்களின் குறைகளை கேட்ட எம்.எல்.ஏ., வருவாய்த்துறை மூலம் நிலத்தை அளந்து, அடுத்த கட்டநடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X