பொது செய்தி

தமிழ்நாடு

'தொடர் வாசிப்பு, எழுதும் திறன் வேலையை பெற்றுத்தரும்'

Added : செப் 14, 2019
Advertisement

ஓமலூர்: ''தொடர் வாசிப்பு, எழுதும் திறன் இருந்தால், வேலைவாய்ப்பை பெற்றுத்தரும்,'' என, சென்னை பல்கலை ஆசிரியர் ஜெய்சக்திவேல் பேசினார்.
சேலம், பெரியார் பல்கலை, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பில், 'வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு உத்தி' தலைப்பில், இரு நாள் பயிலரங்கம், நேற்று தொடங்கியது. பேராசிரியர் நந்தகுமார் தலைமை வகித்தார். அதில், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், சென்னை பல்கலை ஆசிரியர் ஜெய் சக்திவேல் பேசியதாவது: நேயர்களின் எண்ணிக்கையை தக்கவைக்க, 'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' போன்ற வானொலிகள், தங்கள் வானொலியை மட்டும் கேட்க, மாதம், 3,000 டாலர்களை, தொழில்நுட்ப கண்காணிப்பாளர்களுக்கு வழங்குகிறது. உள்ளூர் நிகழ்ச்சிகளை இணையதளத்தில் வலையேற்றினால், அதை, 50 ஆயிரம் நேயர்களுக்கு மேல் கேட்டால், வலையேற்றியவர்களுக்கு, இணையதளம் பணம் வழங்கும் சூழல் உள்ளது. நொடிப்பொழுதில், வெளிநாட்டு வானொலிகளை கேட்கும் அளவு, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஒரு செயலியை பயன்படுத்தி, 24 ஆயிரம் வானொலிகளை கேட்க முடியும் என்பதை, இணையம் சாத்தியப்படுத்தியுள்ளது. இதனால், வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. ஆளுமை, தொடர்ச்சியான வாசிப்பு, எழுதும் திறன் ஆகியவை, வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்பதால், மாணவர்கள் படிக்கும் காலத்தில், தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒரு செல்லிடப்பேசியை மட்டுமே வைத்து, ஒரு வானொலி நிலையத்தை நடத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார். உதவி பேராசிரியர்கள் சுப்ரமணி, அனுராதா, தமிழ்ப்பரிதி, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X