பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வாரிய செயற்பொறியாளர் உள்பட 2 பேருக்கு பிடிவாரன்ட்

Added : செப் 14, 2019
Advertisement

மேட்டூர்: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் உள்பட இரு அதிகாரிகளுக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி, சாணார்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவர், ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் நிதி நிறுவனத்தில், 12 ஆண்டுக்கு முன், தன் காசோலை, மகன் சண்முகம், மருமகள் ஜெயலட்சுமி காசோலைகளை கொடுத்து, 2.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதை, மணிகண்டன் வங்கியில் செலுத்தியபோது, பணமில்லாமல் திரும்பியது. இதனால், மூவர் மீதும், மணிகண்டன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, மேட்டூர் கூடுதல் மாவட்ட(விரைவு) நீதிமன்றத்தில் நடக்கிறது. விசாரணைக்கு, கரூர் மாவட்ட, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், கரூர் மாவட்ட, தமிழ்நாடு சிறுதொழில் முதலீட்டு கழக மேலாளருக்கு, சம்மன் அனுப்பியும், அவர்கள் ஆஜராகவில்லை. நேற்று, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன் முடிவில், ஆஜராகாத இருவருக்கும், நீதிபதி திருநாவுக்கரசு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X