சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த கணவர்

Added : செப் 14, 2019
Advertisement

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கத்தியால் குத்தி கொலை செய்து கணவர், போலீசில் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கீழ்வன்னியனூரை சேர்ந்த திருவேங்கடம், 34, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கும், மதுரையை சேர்ந்த செல்வி, 33, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், செல்வி சென்னை சென்றுவிட்டார். இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்து, கடந்த மாதம் சேர்த்து வைத்தனர். நேற்று முன்தினம் திருவேங்கடத்தின் உறவினர் குணசேகரன், 28, என்பவர், செல்வியை பைக்கில் உட்கார வைத்து சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த திருவேங்கடம், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார். அன்று இரவு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, செல்வியிடம், 'நான் உனக்கு போன் செய்தேன், 20 நிமிடங்கள் பிஸி என வந்தது. நீ யாருடன் பேசி கொண்டிருந்தாய்' எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஆத்திரமடைந்த திருவேங்கடம், செல்வியை கத்தியால், சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து கலசப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று காலை திருவேங்கடம் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X