சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனது வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

Added : செப் 14, 2019
Advertisement

ஆரணி: ஆரணி அருகே, தனது வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமாத்மா, 70, விவசாயி; இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு பாஸ்கரன், பார்த்திபன் என இரு மகன்கள், உஷாராணி என்ற மகள் உள்ளனர். பரமாத்மாவிற்கு சொந்தமான நிலம், ஆகாரம் பல்லாந்தாங்கல் ஏரிக்கரை அருகே உள்ளது. இவரது நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், பயிர்களை எலி கடித்து நாசம் செய்துவிடுவதால், தினமும் இரவு நேரத்தில் எலிக்காக மின்வேலி அமைத்து, காலையில் அகற்றிவிடுவது வழக்கம். இதேபோன்று, நேற்று முன்தினம் இரவு மின்வேலி அமைத்தார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் பரமாத்மா நிலத்தில் இருந்து, வீட்டிற்கு செல்லவில்லை. இதனால், பார்வதி, பார்த்திபன் ஆகியோர் நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, பராமத்மா மின்வேலியில் சிக்கி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை, ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்,அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X