நாட்டின் ஒரே மொழி ஹிந்தி: அமித்ஷா ஆசை

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (388)
Advertisement
Amit shah, Hindi, HOme Minister, HM,  அமித்ஷா, ஹிந்தி, இந்தி,

புதுடில்லி: நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை பிரபலப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு, அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும், முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது அவசியம். நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். இதன் மூலம், உலக அளவில், இந்தியாவை பிரபலபடுத்த முடியும்.





ஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அத்துடன், ஹிந்தி மொழியை கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


ஸ்டாலின் கண்டனம்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கூறியதாவது:இந்தியாவா? 'ஹிந்தி'-யாவா? உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க திமுக தயாராக இருக்கிறது. இது இந்தியா . 'ஹிந்தி'யா அல்ல எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (388)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
18-செப்-201917:19:34 IST Report Abuse
chander உங்களை போல் ஆட்கள் அரசியலில் இருக்கக்கூடாது என்பது மக்களின் ஆசை
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
18-செப்-201908:09:48 IST Report Abuse
ashak அதான் ஐந்தாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு நிமித்திட்டீங்களே அப்பறம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
16-செப்-201922:50:37 IST Report Abuse
Rajesh முதல்ல சுகாதாரமான காற்று, நீர்,கழிப்பிடம், சுகாதாரம், கல்வி இதையெல்லாம் எல்லோருக்கும் ஒழுங்கா கொடுங்க அப்புறம் மொழி பற்றி யோசிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X