பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (42)
Share
Advertisement
Government, Uniform Civil Code, Supreme Court, சிவில் சட்டம், சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டத்தை அமல்படுத்த கடந்த 63 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இது குறித்து தற்போது வரை மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக்கூறியுள்ளது.

வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத் போஸ் அமர்வு கூறியதாவது: அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் ஒரு நாள்,சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தனர். மத ரீதியான நம்பிக்கைகள் அடிப்படையிலான திருமண தனிச்சட்டங்கள், விவாகரத்து சட்டங்களை மாற்றி சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என நம்பினர்.
மக்களை பாதுகாக்கும் வகையில், சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என, மாநிலங்களின் கொள்கைகள் குறித்து விவரிக்கும் சட்டப்பிரிவு 44 ல் 4வது பத்தியில் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.


latest tamil news1956ல் ஹிந்து சட்டங்கள், நெறிமுறைபடுத்தப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும், அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த 1985 ல் இரண்டு வழக்குகளில், சிவில் சட்டம் குறித்து கோர்ட் கருத்து தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.சிவில் சட்ட விவகாரத்தில், கோவா சிறந்த உதாரணமாக உள்ளது. அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டம் உள்ளது. முஸ்லிம் ஆண்கள், முத்தலாக் சொல்லி விவாகரத்து பெற முடியாது எனக்கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
15-செப்-201907:12:21 IST Report Abuse
Viswam அந்நாள் தொட்டு இந்நாள் வரை காங்கிரஸிற்கு இந்த விஷயத்தில் அக்கறை இருந்ததாக தெரியவில்லை. இருந்திருந்தால் நாட்டிற்கு தேவையான ஒரு சட்டம் எப்போதோ வந்திருக்கும். அதன் பயனால் இன கலவரங்களும் நடவாமல் இருந்திருக்கும். கலவரங்கள் நடத்தி, செகுலர் போர்வையில் காங்கிரஸ் கூட்டம் ...தை எழுத இடம் போதாது. அதை மறைப்பதற்கு வாஜ்பாய் மற்றும் மோடி அரசின் பத்து வருட காலத்தில் என்ன செய்தார்கள் என்பது மட்டுமே சொம்புகளால் கேட்க முடியும். சொச்ச மிச்சம் நேரத்தை ஒரு ஒழுங்கான தலைவரை தேர்ந்தெடுத்து படுத்த படுக்கையாக இருக்கும் கட்சியை உயிர் கொடுத்து வளர்க்கும் பணியில் செலவிடாமல் இத்தாலிய மைனோ போல பாஜக அரசு கொண்டுவரும் திட்டங்களை விமர்சிப்பதற்கே காங்கிரஸ் அல்லக்கைகள் நேரம் செலவிடுகிறார்கள். தேசத்திற்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தேவை என்பதை உணர்ந்தால் தவறுகள் திருத்தப்படலாம். ஆனால் போலி காந்தி குடும்ப அடிமைத்தனம்தான் எங்களுக்கு சாசனம் என்று இருந்துவிட்டால் கடவுளால்கூட காங்கிரெஸ்ஸை காப்பாற்றமுடியாது.
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201921:31:26 IST Report Abuse
krishna sudalai pongi ezra vendum.Saiko kiruna thiru murugan Gandhi ena ellorodum supreme court munnal sagum varai porattam.Anal pachai moorga kootam ivargalukku biryani supply seyyanum.Indha msnam Jetta kootathukku vottu podumthamizhan ulagin miga kevalamana jandhu
Rate this:
Cancel
14-செப்-201921:02:42 IST Report Abuse
Ramachandran V S Ramachandran I hope Mr Stalin and co will not plan an agitation on the front gate of Supreme court against the SC observation.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X