சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாஜி கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement

சென்னை: சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், ஆளுங்கட்சியினரின் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் தவறிவிழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவர் மீது ஏறியதில் சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ.பி.கோ.304(ஏ) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த, ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ஜெயகோபால் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஜெயகோபால் நெஞ்சுவலி என்று கூறி, சென்னை பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201923:29:42 IST Report Abuse
ஸாயிப்ரியா வேறு எதாவது பேனருக்கு அடியில் நிற்க வைக்கலாம் எதற்கு மருத்துவ மனை.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-செப்-201919:19:43 IST Report Abuse
Indhuindian கவர்மெண்ட் ஹாஸ்ப்பிடல்லே கைதிகளுக்கான வார்டில் சேர்க்கவேண்டும் நெஞ்சு வலி போயி போயிடும் அதைவிட வேறு சிறந்த வைத்தியம் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
14-செப்-201919:04:08 IST Report Abuse
வந்தியதேவன் இதுவும் கடந்து போகும்... இந்நிகழ்வும் மறந்து போகும்... நமக்குத்தான் மறதி அதிகமாச்சே சாமியோவ்... சரி..சரி... சிலபல மாதங்களுக்கு முன்னாடி... பொள்ளாச்சி நிகழ்வு...ன்னு ஒண்ணு நடந்துதே ஞாபகம் இருக்கா...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X