தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி - பா.ஜ., இடையே உரசல்: தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டதில் அதிருப்தி

Updated : செப் 15, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (13)
Advertisement
கவர்னர், தமிழிசை, நியமனம், ராஷ்டிரிய சமிதி, உரசல், கண்காணிப்பு

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தின் புதிய கவர்னராக, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி - பா.ஜ., இடையே, புதிய உரசல் போக்கை உருவாக்கி உள்ளது. அம்மாநில முதல்வர், சந்திரசேகர ராவின் அரசை, தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவே, திட்டமிட்டு இந்த அரசியல் நகர்வு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, ஆளும் தரப்பு, மறைமுக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2014ல், ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின், அதன் முதல்வராக சந்திரசேகர ராவ், முதல் முறையாக பதவி ஏற்றார். ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடைவதற்கு முன்னரே, அமைச்சரவையை கலைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டார்; இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றினார்.

இந்நிலையில், தெலுங்கானா சட்ட சபைக்கு, 2023ல் நடக்கும் தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. அதற்கான முஸ்தீபுகளில், இப்போதே பா.ஜ., களம் இறங்கி விட்டதாக, அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பா.ஜ., வியூகம்


தெலுங்கானா கவர்னராக பதவி வகித்து வந்த, இ.எஸ்.எல்.நரசிம்மனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழக, பா.ஜ., தலைவராக பதவி வகித்து வந்த, தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானாவின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் கூட, பா.ஜ., வியூகத்தின் ஒரு பகுதி தான் என, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இது, 2023 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, பா.ஜ., நிகழ்த்தி உள்ள திட்டமிட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

காரணம், முந்தைய கவர்னராக பதவி வகித்த நரசிம்மன், மாநில அரசுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். எனவே, பரபரப்பாக அரசியல் செய்து அனுபவம் வாய்ந்த, சமரசம் செய்து கொள்ளாத ஒருவரை, இம்மாநில கவர்னராக நியமிக்க, பா.ஜ., தலைமை திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவர்களது எதிர்பார்ப்பை, தமிழிசை பூர்த்தி செய்வார் என, பா.ஜ., தலைமை நம்புவதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தமிழிசையை, மாநில கவர்னராக நியமித்ததில், சந்திரசேகர ராவ் அரசு அதிருப்தியில் உள்ளது. எதிர்பார்த்ததை விட, மிக விரைவாகவே, இரு தரப்புக்கும் இடையிலான உரசல் துவங்கி விட்டதாக, கூறப்படுகிறது. தெலுங்கானாவின் முன்னணி பத்திரிகைகளில், சமீபத்தில் வெளியான ஒரு செய்தி கட்டுரையின் வாயிலாக, இந்த உரசல் துவங்கி உள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவின் தலைமை செய்தி தொடர்பு அதிகாரியும், அவருக்கு மிக நெருக்கமானவருமான, ஜ்வாலா நரசிம்ம ராவ் என்பவர், சமீபத்தில் ஒரு செய்தி கட்டுரையை எழுதினார். இது, 'ஆந்திர ஜோதி' என்ற தெலுங்கு நாளிதழிலும், 'ஹன்ஸ் இந்தியா' என்ற ஆங்கில நாளிதழிலும் வெளியானது.

தமிழிசையின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில், கூறப்பட்டு உள்ளதாவது: மத்தியில் ஆளும் கட்சியை, மாநிலத்தில் வேரூன்ற செய்யும் நோக்கத்துடனேயே, கவர்னர்களை நியமிக்கும் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில், பல மாநில கவர்னர்கள் நியமனத்தில் கூட இந்த நோக்கம் தொடர்வது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த நடைமுறையில், மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியத்திலும், அவசரத்திலும் நாம்உள்ளோம். சர்க்காரியா கமிஷன், 1987ல் வெளியிட்ட அறிக்கையில், மாநில கவர்னர் நியமனம் குறித்து, தெளிவாக சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்படுபவர், மாநில அரசியலில் அதிகம் பங்கு பெறாதவராகவும், சமீப கால அரசியலில், தொடர்பு இல்லாதவராகவும், ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கியவராகவும் இருக்க வேண்டும் என, கூறியுள்ளது.

மேலும், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியை சேர்ந்தவரை, அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலத்தின் கவர்னராக, நியமிக்கக் கூடாது எனவும், அப்படி நியமிப்பதற்கு முன், மாநில முதல்வரின் கருத்தை கேட்டறிய வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது. இந்த பரிந்துரைகள் எதுவும், சமீபத்திய கவர்னர்கள் நியமனத்தில் பின்பற்றப்படவில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


கண்டனத்துக்குரியது


இந்த கட்டுரை வெளியாகி நான்கு நாட்களுக்கு மேலாகியும், முதல்வர் சந்திரசேகர ராவ் தரப்பில் இருந்து, கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தலைமை செய்தி தொடர்பு அதிகாரியின் கருத்தை அவர் ஆமோதிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை.

இந்நிலையில், இந்த செய்தி கட்டுரை குறித்து, தெலுங்கானா, பா.ஜ., செய்தி தொடர்பாளர், கிருஷ்ணசாகர் ராவ் கூறியதாவது: தமிழிசை சவுந்தரராஜன், கவர்னராக நியமிக்கப்பட்டதை கண்டு, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு, கலகலத்து போயுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது, அவர்களுக்கு நன்கு தெரியும். புதிய கவர்னரை அவமதிக்கும் விதமாக, மூத்த அரசு அதிகாரி, இப்படியொரு கட்டுரை எழுதுவது, கண்டனத்துக்குரியது.கவர்னர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, தவறாக பயன்படுத்துவார் என்பது போன்ற தோற்றத்தை, இது உண்டாக்கிவிடும். எனவே, தலைமை செய்தி தொடர்பு அதிகாரியின் கருத்துக்கு, முதல்வர் கண்டனம் தெரிவித்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-செப்-201906:22:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தமூக்கனும் பிராடுதான் சந்திரபாபு போலவே கோடிகளா சுருட்டிருக்கான் ஜெகன் ரொம்பவே சுத்தம் வரதுக்கலியே ஆட்டம் போடுறாங்க
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-201916:24:24 IST Report Abuse
Endrum Indian இதைத்தான் அறிவித்த அன்றைய தினமே சொல்லிவிட்டேனே இது ஒரு கிரண் பேடி நாறிப்போன சாமி மாதிரி உறவு மாதிரி என்று.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-செப்-201913:56:41 IST Report Abuse
Nallavan Nallavan ஏன்யா ராவ்காரு... ஒரு பதினஞ்சு நாளு உன்னால தாக்குப்பிடிக்க முடியலையே .... நாங்க வருஷம் முச்சூடும் இது கூவுறத, புலம்புறதைக் கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆயிக்கிடக்கோமே ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X