பா.ஜ நியமனத்தில் முக்கிய பதவிகள் தக்கவைப்பு

Updated : செப் 16, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
நியமனம், பா.ஜ , பதவி, தக்கவைப்பு, கனிமொழி, அமித்ஷா

புதுடில்லி : பல்வேறு துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு முக்கிய துறைகளின் நிலைக்குழு தலைவர் பதவிகளை, இந்த முறை, பா.ஜ., தக்க வைத்துக் கொண்டுள்ளது. உள்துறை நிலைக் குழு தலைவராக, காங்., மூத்த தலைவர், ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மீண்டும் அமைந்து, 100 நாட்களாகி உள்ள நிலையில், பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில், பல்வேறு துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான நியமன அறிவிப்புகளை, லோக்சபா செயலர் சிநேகலதா ஸ்ரீவத்ஸவா வெளியிட்டு உள்ளார். மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்று, லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர், இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பர்.


கண்டனம்

பா.ஜ., தலைவர் அமித் ஷா கவனித்து வரும் உள்துறை அமைச்சகத்துக்கான நிலைக் குழுவின் தலைவராக, காங்., மூத்த தலைவர், ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை, இந்த நிலைக் குழுவின் தலைவராக இருந்த, சிதம்பரம், தற்போது ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால், ஆனந்த் சர்மாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் நுகர்வோர் நலன், தொழிலாளர் நலத்துறை, ரசாயனம் மற்றும் உரம் போன்ற துறைகளுக்கான நிலைக்குழு தலைவர் பதவிகள், எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த, நிதி, ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறைகளுக்கான நிலைக்குழு தலைவர் பதவி, வழக்கமாக, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும். தற்போது இவற்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர்களான, ஜெயந்த் சின்ஹா, நிதித் துறைக்கும்; ஜூவல் ஓரம், ராணுவத் துறைக்கும்; பி.பி. சவுத்ரி, வெளியுறவுத் துறைக்குமான நிலைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா, எம்.பி.,யான, புபேந்தர் யாதவ், பணியாளர் நலன், சட்டத் துறை நிலைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர பா.ஜ.,வைச் சேர்ந்த, ராகேஷ் சிங், நிலக்கரி மற்றும் இரும்பு துறை; ரமேஷ் பிதுரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு; ரமா தேவி, சமூக நீதி; சத்யநாராயண் ஜாட்டியா, மனிதவள மேம்பாட்டுத் துறை; ஜகதாம்பிகா பால், நகர்ப்புற வளர்ச்சி; சஞ்சய் ஜெய்ஸ்வால், நீர் வளத் துறைக்கான நிலைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே துறை நிலைக் குழுத் தலைவராக, பா.ஜ.,வின் ராதா மோகன் சிங்கும்; வேளாண் துறை நிலைக்குழு தலைவராக, பா.ஜ.,வின் பி.சி.கட்டி கவுடரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், தெலுங்கு தேசத்தில் இருந்து பா.ஜ.,க்கு வந்த, டி.ஜி. வெங்கடேஷ், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை நிலைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


எதிர்க்கட்சிகள்


எதிர்க்கட்சிகளில், பா.ஜ.,வுக்கு நட்பு கட்சியாக கருதப்படும், ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் விஜய்சாய் ரெட்டி, வர்த்தகத் துறை நிலைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிஜு ஜனதா தளத்தின் பார்த்ருஹரி மெஹதாப், தொழிலாளர் நலத்துறை; கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன், எரிசக்தி; சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஊரக வளர்ச்சித் துறையின் நிலைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை வெளியுறவுத் துறை நிலைக்குழு தலைவராக இருந்த, காங்.,கின் சசி தரூர், தகவல் தொழில்நுட்பத் துறை நிலைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், சுகாதாரத் துறை நிலைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திரிணமுல் காங்.,கின் சுதிப் பந்தோபாத்யாய், உணவு, நுகர்வோர் நலன் மற்றும் பொது வினியோகத் துறைகளுக்கான, நிலைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை நிலைக்குழு உறுப்பினராக இருந்த, காங்., முன்னாள் தலைவரான, ராகுல், தற்போது, ராணுவ துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கனிமொழிக்கு பதவி


உரம் மற்றும் ரசாயன துறை நிலைக்குழு தலைவராக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம், 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில், தமிழக, எம்.பி.,க்களான வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் மற்றும் செல்வராஜ், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக, எம்.பி.,க்களில், நிலக்கரி மற்றும் உருக்கு துறைக்கு, தொல்.திருமாவளவன்; வர்த்தக துறைக்கு, கதிர் ஆனந்த், சண்முகசுந்தரம்; பாதுகாப்பு துறைக்கு, கலாநிதி வீராசாமி; தொழில் துறைக்கு, ஜோதிமணி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை நிலைக் குழுவின் உறுப்பினராக, தி.மு.க.,வின் தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல தமிழக, எம்.பி.,க்கள், பல்வேறு நிலைக் குழுக்களில், உறுப்பினர்களாக, நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-செப்-201906:37:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni கேவலமாயிருக்கே எண்ணத்தகுதி இருக்கு இந்த எதிர்கட்சிலே இருக்கும் எம்பிக்கள் எல்லாம் நேர்மையே இல்லாதவங்களே
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-செப்-201906:23:23 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவ்ளோவருஷமா ஆண்டங்களே கான் கிரேஸ் எப்படி இருந்தானுக
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya,இந்தியா
15-செப்-201922:26:13 IST Report Abuse
Rajan கனியக்கோ, பிஜேபி ஏதோ பிளான் panrango, சூசைய கேட்டு சூசகமா நடந்துக்கோங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X