இந்தியா - பாக்., அமைதி: அமெரிக்க எம்.பி.,க்கள் கடிதம்

Updated : செப் 14, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன் : 'இந்தியா மற்றும் பாக்., இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் அரசுகள் செயல்பட வேண்டும்' என, இந்த நாடுகளுக்கான அமெரிக்க துாதர்களுக்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா, பாக்., இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில்,

வாஷிங்டன் : 'இந்தியா மற்றும் பாக்., இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் அரசுகள் செயல்பட வேண்டும்' என, இந்த நாடுகளுக்கான அமெரிக்க துாதர்களுக்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.



latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா, பாக்., இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க துாதர்களுக்கு, அமெரிக்க பார்லி.,யைச் சேர்ந்த, ஏழு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியா, பாக்., இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது, உலக அமைதிக்கும், நமது நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.தெற்காசியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


latest tamil news



மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தவும், இந்த நாடுகளுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தவை.


latest tamil news


அதனால், இந்தியா, பாக்., இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில், துாதர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201917:55:59 IST Report Abuse
Boopathi Subramanian விரைவில் பாகிஸ்தான் கழுவி சுத்தம் செய்து இந்திய மாநிலமாக இணைக்கப்படும்
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
15-செப்-201909:16:10 IST Report Abuse
வல்வில் ஓரி கதிரழகன் சார் சொல்லுறதுல அத்தினியும் நெசம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-செப்-201907:50:20 IST Report Abuse
blocked user அமெரிக்கா தனது தீவிரவாத ஆதரவை விலக்கிக்கொண்டால் பாக்கிகள் தானே திருந்துவார்கள். அறிவுரை வேலைக்கு ஆகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X