'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்'

Updated : செப் 16, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (72)
Share
Advertisement
 'இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்'

புதுடில்லி : ''இந்தியாவை ஒருங்கிணைக்க, ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாடு முழுவதும், 'ஹிந்தி தினம்' நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், தனி முக்கியத்துவம் உள்ளது. எனினும், சர்வதேச அளவில், இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி தான் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இன்றைய நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும், ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும், ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும்.ஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, தாய்மொழி பயன்படுத்துவதை, நாம் அதிகப்படுத்த வேண்டும்; அதேநேரத்தில், ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும்.

'ஒரு நாடு; ஒரே மொழி' என்ற, மஹாத்மா காந்தி, சர்தார் படேலின் கனவை நிறைவேற்றுவதில் நாம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அமித் ஷா கூறியிருந்தார்.ஹிந்தி தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமித் ஷா பேசுகையில், ''வடகிழக்கு மாநிலங்களில், அனைத்து குழந்தைகளுக்கும், ஹிந்தி கற்றுத் தரப்படும்,'' என்றார்.அமித் ஷாவின், 'ஒரு நாடு; ஒரே மொழி' கருத்துக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின், 'ஒரு நாடு, ஒரே மொழி' திட்டம், இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்தி பேசாத மக்களை, இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சி. இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே, இப்படி கருத்து வெளியிட்டிருப்பது, வேதனைக்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கு உரியது. பிரதமர் மோடி, தன்னுடைய நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.

இல்லையெனில், தி.மு.க., இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். இது, இந்தியா; 'ஹிந்தி'யா அல்ல.பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: 'இந்தியாவின் ஒற்றை மொழியாக, ஹிந்தி இருக்க வேண்டும்' என்ற, அமித் ஷாவின் கருத்து தவறானது. பிற மொழிகள் பேசும் மக்கள் மீது, ஹிந்தியை திணிக்கக் கூடாது.தாய்மொழியே பெரிது''நாம் பல மொழிகளை கற்றாலும், அனைவருக்கும், அவரவர் தாய் மொழிதான் பெரிது,'' என, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு, டுவிட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஹிந்தி பேசும் மக்களுக்கு, என் வாழ்த்துகள்; நாம் அனைத்து கலாசாரங்களையும், மொழிகளையும், சமமாக மதிக்க வேண்டும். பல மொழிகளை நாம் கற்கலாம்; ஆனால், நம் தாய்மொழியை ஒருபோதும் மறக்கக் கூடாது. தாய்மொழி தான், அனைவருக்கும் பெரிது,'' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
15-செப்-201921:25:25 IST Report Abuse
வல்வில் ஓரி ஒரு நாகர்கோயில் காரன் ரெம்ப நாளா மலையாளத்தானா இருந்திட்டு இப்போ திருவிதாங்கூர் தமிழ்நாட்டுல சேந்த அப்புறம் தமிழ் பேசி இப்போ என்னமோ குமரி தான் தமிழ்மொழிக்கு தாய் இன்றான் ...🤣😌😆😝😜
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
15-செப்-201921:12:17 IST Report Abuse
வல்வில் ஓரி வெளி மாநில மொழியே வரக்கூடாதுன்னா வெளிநாட்டு மதத்தினை யும் விரட்டணும். நியாயம் ன்னா பொதுவாத்தான் இருக்கணும்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
17-செப்-201908:39:15 IST Report Abuse
Amal Anandanநாட்டில் இருக்குற பிரச்சினையை சரி பண்றதை விட்டுட்டு இப்படி மொழியை திணிக்கிறேன், மதத்தை பற்றியே பேசி நாட்டை பாழாக்கியாச்சு ஆனாலும் இன்னும் முட்டுகுடுக்குறது அடிமைகளின் வழக்கம். நடத்துங்க....
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
15-செப்-201921:01:08 IST Report Abuse
Rajas இந்தியில் மருத்துவ பாடங்களை கட்டாயமாகுவது குறித்து Research செய்யும் படி இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அவர்கள் அது குறித்து ஆராய்ச்சி செய்து இந்தியில் கொண்டு வரவே முடியாது என்று அறிக்கை அளித்து விட்டார்கள். அதை 3 ஆகஸ்ட் 2018 ல் Central Health Minister ஜே பி நட்டா பார்லிமென்டில் எழுத்து மூலமாக submit செய்திருக்கிறார்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
17-செப்-201908:40:08 IST Report Abuse
Amal Anandan//இந்தியில் மருத்துவ பாடங்களை கட்டாயமாகுவது குறித்து Research செய்யும் படி இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அவர்கள் அது குறித்து ஆராய்ச்சி செய்து இந்தியில் கொண்டு வரவே முடியாது என்று அறிக்கை அளித்து விட்டார்கள். அதை 3 ஆகஸ்ட் 2018 ல் Central Health Minister ஜே பி நட்டா பார்லிமென்டில் எழுத்து மூலமாக submit செய்திருக்கிறார்.// இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஹிந்தியை கையில் எடுத்தால் எங்களுக்கு ஒட்டு கிடைக்கும் எளிதாக....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X