வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை மீட்டது பாக்., ராணுவம்

Added : செப் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை மீட்டது பாக்., ராணுவம்

புதுடில்லி : எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில், உயிரிழந்த தன் ராணுவ வீரர்களின் உடல்களை, வெள்ளைக் கொடியுடன் வந்து, பாகிஸ்தான் ராணுவம் மீட்டுச் சென்றது. இது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், எல்லையில், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின், ஹாஜிபுர் பகுதியில் இருந்து, பாக்., ராணுவம் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதற்கு, நம் பாதுகாப்புப் படைகள், தகுந்த பதிலடி கொடுத்தன.


நிலைகுலைவு

இந்த தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடைய உடலை மீட்பதற்காக, தன் தாக்குதலை, பாக்., ராணுவம் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து நடந்த தாக்குதலில், மேலும் ஒரு, பாக்., ராணுவ வீரர் கொல்லப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக, அந்த இரண்டு வீரர்களின் உடல்களை மீட்பதற்காக, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. நம் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்ததால், பாக்., ராணுவம் நிலைகுலைந்தது.

இந்நிலையில், பாக்., ராணுவம், வெள்ளைக் கொடியுடன் வந்து, அந்த இரண்டு வீரர்களின் உடல்களை, நேற்று முன்தினம் மீட்டுச் சென்றது. அதை மதித்து, நம் படைகள் தாக்குதல் நடத்தாமல் இருந்தன. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. உயிரிழந்த இரண்டு வீரர்களும், பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது, தெரிய வந்துள்ளது.


முன்வரவில்லை


இது குறித்து, நம் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: கேரான் பகுதியில், இந்தாண்டு ஜூலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, பாக்., ராணுவத்தின், ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அவர்களுடைய உடல்களை மீட்பதற்கு, பாக்., ராணுவம் முன்வரவில்லை. அந்த வீரர்கள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பாக்.,கின் வடக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பர். கார்கில் போரின்போதும், தன் வீரர்கள் உடல்களை மீட்க, பாக்., முன்வரவில்லை.

பாக்., ராணுவத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிக அளவில் உள்ளனர்; முக்கிய பதவிகளிலும் உள்ளனர். அவர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் தான், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் மட்டுமே, அவர்களுடைய உடல்களை மீட்க, பாக்., ராணுவம் எப்போதும் முன்வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பள்ளியில் சிக்கிய மாணவர்கள்


ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை குறி வைத்து, பாக்., ராணுவம், தன் எல்லையில் இருந்து அத்துமீறி நேற்று, தாக்குதல் நடத்தியது. காலையில் துவங்கிய இந்த தாக்குதல் நீண்ட நேரம் நீடித்தது. கையெறி குண்டுகளை வீசியும், பீரங்கி தாக்குதலிலும், பாக்., ராணுவம் ஈடுபட்டது. இதனால், எல்லையோரத்தில் உள்ள சில பள்ளியில் படித்த மாணவர்கள், பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே, நீண்ட நேரம் முடங்கி இருக்க நேர்ந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த, நம் பாதுகாப்புப் படைகள், கடுமையாக போராடி, பள்ளியில் சிக்கிய மாணவர்களை மீட்டன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
20-செப்-201906:27:15 IST Report Abuse
Sathya Dhara சந்தேகமே வேண்டாம். வெறி என்ற ஒரு உணர்ச்சியை தவிர எந்த மனித தன்மையும் இல்லாதவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-செப்-201905:32:53 IST Report Abuse
 nicolethomson வெக்கம் கெட்ட மனிதர்களோ இந்த பாக்கிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X