அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ.,வில், 'மோடி ஆர்மி' உதயம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (26)
Advertisement
 தமிழக பா.ஜ.,வில், 'மோடி ஆர்மி' உதயம்

சென்னை : தமிழக, பா.ஜ., தலைவரை நியமிக்க, மூன்று வழிமுறைகளை கையாள, அக்கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. தலைவர் பதவியை, எச்.ராஜா கைப்பற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்கள், 'மோடி ஆர்மி' குழுவை உருவாக்கி உள்ளனர். இக்குழு சார்பில், சென்னையில், வரும், 22ம் தேதி நடைபெறவுள்ள, சமூக வலைதள மாநாடு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது.

தமிழக, பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். அதனால், மாநில தலைவர் பதவி, காலியாக உள்ளது. இந்த பதவியை கைப்பற்ற, தமிழக, பா.ஜ., நிர்வாகிகள் மத்தியில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தல், அக்., 15ல் துவங்கி, நவ., இறுதி வரை நடைபெறவுள்ளது. அதற்குள், புதிய தலைவரை நியமிப்பதற்கு, டில்லி மேலிடம், மூன்று வழிமுறைகளை கையாள, ஆலோசித்து வருகிறது.

மூத்த தலைவர்களில் ஒருவரை நியமிப்பதா; மாற்று கட்சிகளில் இருந்து வந்த, முக்கிய பிரமுகர் களுக்கு வாய்ப்பு அளிப்பதா அல்லது 35 வயதிற்குள் இருப்பவர்களுக்கு, தலைவர் பதவி தருவதா என, ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில், ஜாதி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செயல்படும், சில கட்சிகளை, பா.ஜ.,வில் இணைய வைத்து, அந்த தலைவர்களில் ஒருவரை, தமிழக, பா.ஜ., தலைவராக்கும் பேச்சும், திரைமறைவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், 'மோடி ஆர்மி' சார்பில், 22ல், சென்னை, விருகம்பாக்கம், ஆற்காடு ரோடு, அமிர்தானந்தமயி திருமண மண்டபத்தில், சமூக வலைதள மாநாடு நடைபெறவுள்ளது. காலை, 9:30க்கு துவங்கி, மதியம், 1:00 மணிக்கு முடிவடைகிறது. 'வாருங்கள், ஊர் கூடி தேர் இழுப்போம்' என்ற தலைப்பில், கட்சித்தொண்டர்களுக்கு, அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில், தேசிய செயலர், எச்.ராஜா, ஸ்ரீனிவாசன், கல்யாணராமன், டால்பின் ஸ்ரீதர், பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: நீண்ட காலமாக, தமிழக,பா.ஜ., தலைவர் பதவியை, எச்.ராஜா எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

எனவே, இந்த முறை பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, அவரது ஆதரவாளர்கள் சார்பில், 'மோடி ஆர்மி' உருவாக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்து, எச்.ராஜா ஆதரவாளர்கள், 'மோடி பேரவை' நடத்தி, சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், கட்சி அலுவலகமான, கமலாயத்திற்கு வந்தால், அமைதியாக, தன் பணிகளை முடித்து விட்டு செல்வார். சமீபத்தில், கமலாயத்தில் நடந்த, கட்சி ஆலோசனை கூட்டத்தில், பெண் நிர்வாகி ஒருவர், 'கமென்ட்' அடித்து, சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

இதை கவனித்த, பொன்.ராதாகிருஷ்ணன், 'யாரும் தேவையில்லாமல், கமென்ட் அடித்து சிரிக்காதீர்கள்; கட்சி பணிகளில், கவனம் செலுத்துங்கள்' என, உத்தரவிட்டார். இதைக் கேட்ட நிர்வாகிகளுக்கு, தலைவர் பதவி இவருக்கு உறுதியாகி விட்டது எனக் கருதுகின்றனர். இந்நிலையில், எச்.ராஜா ஆதரவாளர்கள், சென்னையில் நடத்தும் மாநாடு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைய உள்ளது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
20-செப்-201905:11:35 IST Report Abuse
Subramanian Sundararaman பொன். ஆர் அல்லது ராகவன் நல்ல choice . அமைதியானவர்கள் . விஷயம் தெரிந்தவர்கள் . H . ராஜா திராவிட கட்சிகளுடன் மல்லுக்கட்டும் தைரியமும் உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் பேசும் சாதுர்யமும் மிக்கவர் . ஆனால் சிக்கலில் அடிக்கடி மாட்டுவார் . தமிழ் நாட்டில் இவருக்கு ஆதரவு கிடைப்பது கஷ்டம் . பிஜேபி ஒருசாரார் கட்சி என்ற தவறான எண்ணத்தை நீக்க பொன்.ஆர் தான் செயல் பட முடியும் . நேர்மையான , எளிமையான ஒருவிதத்தில் காமராஜரை நினைவூட்ட கூடிய சிறந்த மனிதர் .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-செப்-201917:59:14 IST Report Abuse
Malick Raja மோடியின் காவலர்கள் என்பது மட்டுமே சரியானதாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
15-செப்-201916:09:48 IST Report Abuse
oce திமுகவை எதிர்க்கும் தைரியமுள்ள நபர் திரு எச்.ராஜா. ராஜாவை தமிழக பாஜக தலைவராக நியமித்தால் பாஜக வளரும்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-செப்-201916:24:25 IST Report Abuse
சுந்தரம் அப்போ இம்புட்டு நாளும் கட்சியில் இரண்டு கோடியே அறுபத்து இரண்டு லட்சத்து ஏழு தொண்டர்கள் இருந்தும் வளராததுக்கு காரணம் திமுகவை எதிர்க்கும் தைர்யமுள்ள நபர் கட்சியில் இல்லாததாலா? எப்போ இதை கண்டுபுடிசீங்கண்ணா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X