அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பங்கேற்பாரா:தி.மு.க.,வுக்கு எதிராக தீக்குளித்தவர்கள் படத்திறப்பு

Updated : செப் 15, 2019 | Added : செப் 14, 2019 | கருத்துகள் (29)
Advertisement
 ஸ்டாலின் பங்கேற்பாரா:தி.மு.க.,வுக்கு எதிராக தீக்குளித்தவர்கள் படத்திறப்பு

சென்னையில் இன்று, ம.தி.மு.க., மாநாடு நடைபெறுகிறது. அதில், தி.மு.க., வாரிசு அரசியலை விமர்சித்து, உயிர் நீத்த, ஐவரின் படங்களும் திறக்கப்படுகின்றன.எனவே, சர்ச்சையில் சிக்குவதை தவிர்க்க, இம்மாநாட்டில், ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, தி.மு.க., சார்பில், திருவண்ணமலையில், இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது. காலையில், 'திராவிடத்தின் திருவிளக்கு' என்ற கவியரங்கத்தை, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி துவக்கி வைக்கிறார். பட்டிமன்றத்தை, கொள்கை பரப்பு செயலர், ஆ.ராஜாவும், திரை இசையரங்கத்தை, ராஜ்யசபா, எம்.பி., சிவாவும் துவக்கி வைக்கின்றனர். மாலை, 6:00 மணிக்கு, விருதுகள் வழங்கி, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். அதேபோல், இன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாநாடு நடக்கிறது. துணை பொதுச் செயலர், சத்யா தலைமை வகிக்கிறார். காலை நிகழ்ச்சியாக, மாநாட்டை துவக்கி வைத்து, ஸ்டாலின் பேசுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரை தொடர்ந்து, ஈரோடு, எம்.பி., கணேசமூர்த்தி, மலேஷிய நாட்டின், பினாங்கு மாநில துணை முதல்வர், ராமசாமி ஆகியோர் பேசுகின்றனர். மாலையில், முன்னாள் காஷ்மீர் முதல்வர், பரூக் அப்துல்லா பேசுவார் என, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர், வீட்டுச் சிறையில் இருப்பதால், சென்னைக்கு வர வாய்ப்பு இல்லை. முன்னாள் மத்திய அமைச்சர்கள், யஷ்வந்த் சின்ஹா, தினேஷ் திரிவேதி மற்றும் வைகோ சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இதில், ஸ்டாலின் பங்கேற்கும் காலை நிகழ்ச்சியில், தி.மு.க.,வின் வாரிசு அரசியலை எதிர்த்தும், வைகோவுக்கு ஆதரவாகவும், உயிர்நீத்த, ஐந்து பேரின் படத்திறப்பு நடக்கிறது. எனவே, ஸ்டாலின் பங்கேற்பாரா, புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வில் வைகோ இருந்தபோது, கருணாநிதியின் அரசியல் வாரிசாக, ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதை விரும்பாதவர்களால், ஸ்டாலினுக்கு போட்டியாக, வைகோ வளர்க்கப்பட்டார். இந்த காரணத்தால், அன்று, ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளாமல், வைகோவை தலைவராக பாவித்து, தி.மு.க.,வில் ஒரு வட்டம் உருவானது. இதன் விளைவாக, வைகோ, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, ஸ்டாலினை ஏற்க மறுத்து, வைகோவுக்கு ஆதரவாக, ஐந்து பேர் தீக்குளித்தனர். இன்று, அந்த ஐந்து பேரின் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, ஸ்டாலினை, ம.தி.மு.க.,வினர் அழைத்துள்ளனர். கூட்டணி தர்மம் கருதி, அவர் பங்கேற்றால், தீக்குளித்த காரணம், அவருக்கு நெருடலை ஏற்படுத்தும். புதிய சர்ச்சையும் உருவாகும். அதனால், ம.தி.மு.க., மாநாட்டை, ஸ்டாலின் புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சென்னை, வள்ளுவர் கோட்டம் முன் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, நேராக திருவண்ணாமலை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-செப்-201918:47:50 IST Report Abuse
D.Ambujavalli இது ஒரு பிரசனையா? ஸ்டாலின் வரும் முன்பே படங்களைத் திறந்துவிட்டு, அப்புறப்படுத்திவிட்டால் போச்சு
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
16-செப்-201915:59:52 IST Report Abuse
prakashc சுடலை தன உயிரை தீக்கு இரையாக போகிறார். இனி தொணப்பிடார்கள் தீக்குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்லி தி சுடலை in இந்தியா ,செய்யஇருக்கிறார் . அதுவும் தன கட்டுமரம் சமாதியில் தம்முளுக்காக உயிர் கொடுக்க இறக்கும் சுடலை அவர்கள் நன்றக வேகா உயர் தர corruption பிரீ ஆயில் need .
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
16-செப்-201915:59:39 IST Report Abuse
King of kindness "திராவிடத்தின் திருவிளக்கு" வை திறந்து வைப்பது யார் - திராவிடத்தின் குத்து விளக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X