அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேற கட்சிக்கு போகலாமா? அதிருப்தியாளர்கள் ஆலோசனை!

Added : செப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

தென் சென்னை வடக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலருக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியவர்களிடம், அ.தி.மு.க., தலைமை நியமித்த, ஐவர் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து, ஒரு மாதமாகியும், தீர்வு காணப்படாததால், முன்னாள் நிர்வாகிகள் கட்சி மாறலாமா அல்லது மீண்டும் போராட்டம் நடத்தலாமா என, ஆலோசித்து வருகின்றனர்.

தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராக, தி.நகர், எம்.எல்.ஏ., சத்யா உள்ளார். அவரது பரிந்துரையில், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலர்கள், வட்ட செயலர்கள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், இரு மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டனர். இது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. புதிய நிர்வாகிகள் பட்டியலை, ரத்து செய்து, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்க வலியுறுத்தி, முன்னாள் நிர்வாகிகள், ஜூலை மாதம், சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சட்டசபை கூட்டம் நடந்ததால், அது முடிந்த பின், பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினர்.சட்டசபை கூட்டம் முடிந்த பின், 'வேலுார் லோக்சபா தேர்தல் முடியட்டும்' என, கட்சி தலைமை இழுத்தடித்தது. தேர்தல் முடிந்த பின்னரும், கட்சி தலைமை கண்டுகொள்ளாததால், அதிருப்தியாளர்கள், கட்சி தலைமை அலுவலகத்தை, மீண்டும் முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களிடம் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண, துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அடங்கிய, ஐவர் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர், கட்சி தலைமை அலுவலகத்தில், தென் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, சட்டசபை தொகுதி நிர்வாகிகளை, தனித்தனியே அழைத்து பேசினர். விசாரணை முடிந்து, 25 நாட்களான நிலையில், இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாவட்ட செயலர் சத்யா, முதல்வர் நிகழ்ச்சிகளில், தவறாமல் பங்கேற்று வருகிறார். இதனால், அதிருப்தியாளர்கள், கட்சி தலைமை மீது, கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசித்து வருகின்றனர்.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'அதிருப்தியில் உள்ளவர்களிடம், தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில், அமைதி காத்து வருகின்றனர். 'கட்சி தலைமை கவனத்தை ஈர்க்க, அடுத்து போராட்டம் நடத்தலாம் என, சிலர் கூறுகின்றனர்; சிலர், தி.மு.க.,வுக்கு போய் விடலாம் என்கின்றனர். எனவே, சத்யா மீது நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-201905:41:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni கட்ச்சியைவிட்டுட்டு மாறிவரும்நபர்களை எந்தகட்ச்சியும் சேர்த்துக்கவே கூடாது அவா எவ்ளோபெரிய மனுசனா வித் யாகவே இருந்தாலும் கெட் அவுட்டுத்தான் சொல்லவேண்டும் காரியவாதிகளை நம்பி ஏற்றுக்கொண்டால் முக்கியமா பிஜேபி யின் தூய்மைக்கு அவமானம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X